எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவு அமோகம்

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் காரின் தர்பார் ஆரம்பமாகி இருக்கிறது. முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலேயே போட்டியாளர்களை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு முன்பதிவு பெற்றிருக்கிறது.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் காரை தொடர்ந்து கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அடுத்த மாத துவக்கத்தில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

இந்த சூழலில், கியா கார்னிவல் காருக்கான முன்பதிவு ஜனவரி 21 முதல் துவங்கப்பட்டது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் முனஅபதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

இந்த நிலையில், முதல் நாளிலேயே 1,410 முன்பதிவுகளை இந்த கார் பெற்றிருக்கிறது. இதில், 64 சதவீத முன்பதிவுகள் லிமோசின் என்ற டாப் வேரியண்ட்டிற்கு கிடைத்துள்ளதாக கியா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. விலை அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னரே, முன்பதிவு பட்டையை கிளப்ப துவங்கி இருக்கிறது.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட பிரிமீயம் மாடலாக வர இருக்கிறது கியா கார்னிவல் கார். அதாவது, தோற்றம், இடவசதி, பிரிமீயம் அம்சங்கள், விலை என அனைத்திலுமே இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட பிரிமீயம் மாடலாக இருக்கும்.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

புதிய கியா கார்னிவல் கார் இரண்டு 7 சீட்டர், ஒரு 8 சீட்டர் மற்றும் ஒரு 9 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. இதில், 7 சீட்டர் லிமோசின் மாடல்தான் விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும். அதேபோன்று, வசதிகளை பொறுத்து பிரிமீயம், பிரஸ்டீஜ், லிமோசின் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

கியா கார்னிவல் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுள், எல்இடி பகல்நேர விலக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை எலெக்ட்ரிக் சன்ரூஃப், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

இந்த காரின் பின் இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல இரண்டு டிவி திரைகள், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், லேப்டாப் சார்ஜர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

கியா செல்டோஸ் காரில் இருப்பது போன்றே, இந்த காரிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியுடன் வர இருக்கிறது. யுவோ செயலியை பயன்படுத்தி, ஸ்மார்ட்ஃபோன் மூலமாக கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, ஏசி சிஸ்டத்தை ஆன் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இயக்க முடியும்.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

புதிய கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 197 பிஎச்பி பவரயைும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

எம்பிவி மார்க்கெட்டில் கியா கார்னிவல் 'தர்பார்' ஆரம்பம்... முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வாடிக்கையாள

புதிய கியா கார்னிவல் கார் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் அதிக இடவசதியுடைய, பிரிமீயம் எம்பிவியை விரும்புவோருக்கு மிகச் சிறந்த சாய்ஸாக அமையும்.

Most Read Articles
English summary
KIA Carnival has garnered 1,410 bookings on the very first day of the pre bookings open on January 21, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X