கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

கியா கார்னிவல் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் தேதி விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மிக நேரடியாக போட்டியாக கியா கார்னிவல் கார் இந்தியாவில் களமிறங்க உள்ளது. இதனால், எம்பிவி கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் இந்த கார் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

டொயோட்டா இன்னோவா காரைவிட இந்த கார் மிகவும் பிரிமீயமாகவும், அதிக இடவசதியுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கியா கார்னிவல் காருக்கு டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தோம்.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

இந்த சூழலில், அடுத்த மாதம் 5ந் தேதி கிரேட்டர் நொய்டாவில் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் நடக்க இருக்கும் பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இடவசதியை வழங்கும் 6 சீட்டர் மாடலிலும் வரும் வாய்ப்புள்ளது. இந்த காரில் கால் வைப்பதற்கான அதிக லெக்ரூம் இடவசதி இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். அதாவது, இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் வருகிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், இரட்டை சன்ரூஃப் அமைப்பு, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலி மூலமாக பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்புகள் கொடுக்கப்படும். 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

இந்த காரில் வழங்கப்படும் இ-சிம்கார்டு மூலமாக நேரடி இணைய வசதியை பெறும். இதற்காக கொடுக்கப்படும் யுவோ செயலி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் கார் பற்றிய தகவல்களை கார் உரிமையாளர் பெற முடியும்.

MOST READ: போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி - தக்க பாடம் புகட்டிய இளைஞர்... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க...!

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

இந்த காரில் பின் இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல டிவி திரைகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். அத்துடன், ரியர் ஸ்பாய்லர், 18 அங்குல அலாய் வீல்கள், ரியர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

MOST READ: பைக் வேண்டாம் என நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க...

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சரிநிகர் மாடலாக இருக்கும்.

Most Read Articles

English summary
South Korean car maker, Kia Motors has revealed the new Carnival MPV launch date for India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X