வீட்டிலேயே இருங்கள்... கார்னிவலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எம்பிவி மாடலான கார்னிவல் காரை பற்றிய தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது இந்த காரின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

இந்திய ஆட்டோமொபைல் துறை புதிய மாசு உமிழ்வு சட்டம் மற்றும் தயாரிப்பு மாடல்களில் அப்டேட்கள் உள்ளிட்டவைகளால் மிக பெரிய அளவில் சரிவை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதியதாக கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பான்மையான அனைத்து ஆட்டோ நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலையை மூடிவிட்டன.

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

இதன் காரணமாக ஒட்டு மொத்த விற்பனை எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பூஜ்ஜியமாக தான் இருந்து வருகிறது. மாடல்களை தயாரிக்க முடியாத சூழல் நிலவுவதால் தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களுடன் இணைப்பை தொடர்கின்றன.

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் போட்டோ, வீடியோ மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வகையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்திய கார்னிவல் எம்பிவி காரின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

முன்னதாக இந்த காரின் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட கார்னிவல் காரின் டிவிசி வீடியோ அப்படியே இந்த புதிய வீடியோவில் பின்னோக்கி நடப்பதுபோல் காட்டப்பட்டு இறுதியில் அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி குறிப்பிடப்படப்பட்டுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்திய சந்தைக்கு வந்த கியாவின் புதிய எம்பிவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.24.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் மாடலுக்கும் இடையேயுள்ள வெற்றிடத்தை நிரப்பும் விதமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

MOST READ:2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த எம்பிபி காருக்கு மூன்று வேரியண்ட்கள் மற்றும் 5 விதமான இருக்கை தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து விதமான இருக்கை தேர்வுகளாக ப்ரீமியம் 7, ப்ரீமியம் 8, ப்ரெஸ்டீஜ் 7, ப்ரெஸ்டீஜ் 9 மற்றும் லிமௌசைன் 7விஐபி உள்ளிட்டவை உள்ளன.

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

நிறத்தேர்வுகளாக க்ளாசியர் வொய்ட் பேர்ல், சில்வர் மற்றும் அரோரா ப்ளாக் பேர்ல் உள்ளிட்டவை வழங்கபடுகின்றன. ஆட்டோமொபைல் நிறுவனங்களை காட்டிலும் சிறு வணிகங்களில் ஒன்றாக உள்ள டீலர்ஷிப்கள் எந்தவொரு பொருளாதார பேக்அப்-மும் இன்றி உள்ளதால் பெரிய அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றன.

Most Read:கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

வீட்டிலேயே இருங்கள்... கார்னிலின் புதிய டீசர் வீடியோவின் மூலம் அறிவுறுத்திய கியா...

இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் பிஎஸ்4 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை சமீபத்தில் அதிகப்படுத்தி இருந்தது. இருப்பினும் டீலர்ஷிப்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழேயுள்ள லிங்கில் காணவும்.

பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்!

Most Read Articles

English summary
Kia Carnival TVC video gets played backwards – Stay Home to Fight Corona Virus
Story first published: Wednesday, April 1, 2020, 15:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X