பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

பிஎம்டபிள்யூ காருக்கு இணையான தரத்துடன் கே5 செடான் காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

கியா மோட்டார்ஸ் புதிய தலைமுறை கே5 (ஆப்டிமா) செடான் காரை உலகளவில் விற்பனைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது. முன்னதாக காற்றில் 360 கோணத்தில் சுழலும் இந்த கியா செடான் காரின் திறனை டிவிசி வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பு நிறுவனம் வெளிகாட்டி இருந்தது.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

இந்த நிலையில் தற்போது பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் வரிசை கார்களுக்கு இணையாக வளைவுகளில் காரின் சறுக்கு திறன் மற்றும் ஆக்ஸலரேஷனை வெளிக்காட்டும் டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎம்டபிள்யூ 330ஐ காரை காட்டிலும் கே5 செடானின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

இருப்பினும் கே5 இந்த பிஎம்டபிள்யூ காரை நேரடி போட்டியாக கருதவில்லை. பிஎம்டபிள்யூ 330ஐ கார் ஒன்றும் நிறுவனத்தின் 3-சீரிஸ் வரிசையில் அவ்வளவு முதன்மையான கார் கிடையாது. இந்த வரிசையில் தற்சமயம் 318ஐ, 320ஐ, 330ஐ, எம்340ஐ மற்றும் அல்பினா பி3 என்ற ஐந்து பெட்ரோல் கார்கள் உள்ளன.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

டீசல் கார்களாக 316டி, 318டி, 320டி, 330டி, எம்340டி மற்றும் அல்பினா டி3 எஸ் உள்ளிட்டவை உள்ளன. இவற்றுடன் 330இ என்ற ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடலும் இந்த வரிசையில் உள்ளது. மிட்-வேரியண்ட்டான 330ஐ காரில் அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் பொருத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

பின்சக்கர ட்ரைவ் மற்றும் அனைத்து சக்கர ட்ரைவ் என்ற இரு விதமான தேர்வுகளில் கிடைக்கும் இந்த பிஎம்டபிள்யூ காரின் பின்சக்கர ட்ரைவ் மாடலுடன் தான் கியா நிறுவனத்தின் ஒப்பீடு உள்ளது. ஆனால் உண்மையில் பின்சக்கர ட்ரைவ்-ஐ காட்டிலும் அனைத்து சக்கர ட்ரைவ் தேர்வில் தான் 330ஐ கார் சிறப்பான ஹேண்டிலிங்கை தருகிறது. ட்ராக்‌ஷன் கண்ட்ரோலும் சிறப்பாக உள்ளது.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

கியா கே5 காரின் ஜிடி வேரியண்ட்டில் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 290 பிஎச்பி மற்றும் 311 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் வழங்கப்படும் கே5 ஜிடி கார் முன் சக்கர ட்ரைவ் வாகனமாகவே தற்சமயம் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் 2021 கியா கே5! நம்மால் பாக்க மட்டும்தான் முடியும்

கியாவிற்கு இது சறுக்கலாக இருந்தாலும் பிஎம்டபிள்யூ காருடனான ஒப்பிடுகையில் கே5 மலிவான விலையில் கொண்டுவரப்படுகிறது. அமெரிக்க சந்தையில் இந்த கியா செடான் காரின் ஆரம்ப விலை 23,490 டாலராக (கிட்டத்தட்ட ரூ.17.33 லட்சம்) உள்ளது. டாப் ஜிடி வேரியண்ட்டின் விலை ரூ.22.49 லட்சம் அளவில் உள்ளது. அதுவே பிஎம்டபிள்யூ 330ஐ காரின் விலை ரூ.30.43 லட்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
2021 Kia K5 Claims Better Performance & Handling Than BMW 3-Series
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X