மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ் எதிர்கால மைல்ட்-ஹைப்ரீட் மாடல்களுக்காக புதிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

கியா நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்நுட்பம் காரின் எரிபொருள் திறனை அதிகரிப்பது மட்டுமில்லாமல், கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை குறைக்கும். இண்டெல்லிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (iMT) என அழைக்கப்படும் இது எலக்ட்ரிக்கலாக க்ளட்ச்-பை-வயர் தொழிற்நுட்பத்தால் இயக்கப்படும்.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பானது 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் இணைக்கப்படும். மைல்ட்-ஹைப்ரீட் ஸ்டார்டர் ஜெனரெட்டரில் பயணத்தின் போது என்ஜினை அணைத்து வைக்க பயன்படும் இந்த புதிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டத்தையே ஓட்டுனர் நம்பியிருப்பதை குறைக்கும்.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

மாசு உமிழ்வை 3 சதவீதம் குறைக்கும் என தயாரிப்பு நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ள இந்த இண்டெல்லிஜெண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மைல்ட்-ஹைப்ரீட்டின் ஸ்டார்டர் ஜெனரெட்டரின் பயன்பாட்டை குறைப்பதால் காரின் எரிபொருள் திறனையும் கணிசமாக மேம்படுத்தும்.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

என்ஜின் அணைந்துவிட்டாலும் வாகனத்தை இயக்கத்திலேயே வைத்திருக்க உதவும் இந்த தொழிற்நுட்பம், ஓட்டுனர் ப்ரேக் அல்லது ஆக்ஸலேரேட்டர் என்ற இரண்டில் ஒன்றை அழுத்தும்போது என்ஜினை சூடாக இருக்க அனுமதிக்கிறது.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

கார் மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினாலோ அல்லது ஓட்டுனர் க்ளட்ச் பெடலுக்கு பதிலாக தவறுதலாக ப்ரேக் அல்லது ஆக்ஸலேரேட்டரை அழுத்திவிட்டால் அந்த இடத்தில் ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டு நியூட்ரலில் இருந்து கார் மீண்டும் இயங்க இந்த இண்டெல்லிஜெண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உதவும்.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

ஓப்பன் க்ளட்ச் சிஸ்டமானது இயக்கத்தின்போது என்ஜின் அணைக்கப்பட்டால் ஏற்படும் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆக்ஸலேரேட்டர் அல்லது க்ளட்ச் பெடலை அழுத்தி என்ஜின் ரீஸ்டார்ட் ஆகும்போது என்ஜின் வேகத்தை சரியான வேகத்திற்கு கொண்டு வரும்.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

கியாவின் புதிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தொழிற்நுட்பம், இயக்கத்தில் உள்ள கியர்களை ஓட்டுனர் நிறுத்துவதை தேவையில்லாமல் செய்து பாரம்பரியமான மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை மிகவும் திறன்மிக்கதாக மாற்றவுள்ளது. மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்களில் உள்ள வழக்கமான ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்தில் உள்ள மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கார் முழுவதும் நின்ற பிறகே செயல்பட ஆரம்பிக்கிறது.

மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்

இந்நிறுவனத்தின் இந்த புதிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு அதன் எதிர்கால மாடல்களில் வழங்கப்படவுள்ளது. அதன்படி ஐரோப்பாவில் அறிமுகமாகவுள்ள கியா ரியோவில் பொருத்தப்படவுள்ள இந்த தொழிற்நுட்பம் அதன்பின் மற்ற சர்வதே சந்தைகளிலும் இந்த வருட இறுதியில் அறிமுகமாகவுள்ளது.

Most Read Articles
English summary
Kia Unveils Intelligent Manual Transmission System For Mild Hybrid Vehicles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X