அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்தியாவில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் சோதனை ஓட்டங்களை மீண்டும் துவங்கியுள்ளது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எஸ்யூவி கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தபட்டுள்ளது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எஸ்யூவி மாடல் இந்த சோதனையில் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகளை நிறைவு செய்தவிட்டது போன்று காட்சியளிப்பதை தற்போது டிசிவி பைக்ஸ் என்ற யூடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ வெளிக்காட்டுகிறது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இதனால் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த சோதனை கார் காட்சியளித்தாலும், ட்யூல்-டோன் அலாய் சக்கரங்கள் மற்றும் கூர்மையான விண்டோ-லைன் உள்ளிட்டவை புலப்படுகின்றன. கியா சொனெட் எஸ்யூவி மாடல் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாக இருந்தது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

ஆனால் கொரோனா வைரஸினால் இதன் அறிமுகம் செப்டம்பருக்கு தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வென்யூவின் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்த எஸ்யூவி மாடலில் இருந்து பெரும்பான்மையான மெக்கானிக்கல் பாகங்களை சொனெட் மாடல் பெற்றுள்ளது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இவை மட்டுமின்றி வசதிகள் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலைகளிலும் சொனெட் மாடலை வென்யூ எஸ்யூவி மாடலுடன் போட்டியிடும் வகையில் தான் கியா மோட்டார்ஸ் நிறுவனம் நிர்ணயிக்கும். சொனெட் எஸ்யூவி மாடலின் விலை குறைவான வேரியண்ட்களில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஏ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு க்ளட்ச்-லெஸ் இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படவுள்ளது. அதுவே இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் டாப் வேரியண்ட்களில் 118 பிஎச்பி மற்றும் 173 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இந்த இரு என்ஜின் தேர்வுகள் மட்டுமின்றி காரின் மைலேஜ்ஜை கருத்தில் கொள்பவர் என்றால் உங்களுக்காக செல்டோஸ் மாடலின் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் தேர்வாக வழங்கப்படவுள்ளது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

சந்தையில் வேகமாக பிரபலமாகி வருகின்ற இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும். சொனெட் மாடலின் மூலமாக இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் நுழையவுள்ளது.

அறிமுகத்தை வேகமாக நெருங்கிவரும் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த பிரிவில் ஏற்கனவே மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் உள்ளன. இவை மட்டுமின்றி ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களும் கிகர் மற்றும் மேக்னைட் எஸ்யூவி கார்கள் மூலமாக நுழைய ஆயத்தமாகி வருகின்றன.

Most Read Articles

English summary
Kia Sonet spotted testing in production guise
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X