இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி மாடலின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. கியாவின் இந்த புதிய தலைமுறை எம்பிவி மாடல் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

கடந்த ஆண்டில் செல்டோஸ் எஸ்யூவி காரின் மூலமாக இந்திய சந்தையில் நுழைந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிற்கான தனது இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை கடந்த பிப்ரவரி மாதத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக அறிமுகப்படுத்தியது.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

தற்போதைய கார்னிவல் எம்பிவி மாடல் ரூ.25 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எம்பிவி காருக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கியா நிறுவனம் இதன் புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

இதற்கிடையில் தான் தற்போது புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி காரின் டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய கார்னிவல் மாடலை காட்டிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் அப்டேட் பெற்று வரவுள்ள இந்த புதிய தலைமுறை காரில் கியா நிறுவனம் லேட்டஸ்ட் டிசைன் மொழியை கொண்டுவந்துள்ளது.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

இதனால் புதிய கார்னிவல் எம்பிவி காரை மாடர்ன் டிசைனில் கூர்மையான ஸ்டைலிங் பாகங்களுடன் எதிர்பார்க்கலாம். இதன் டீசர் படத்தின் மூலமாக பார்க்கும்போது காரின் முன்புறத்தில் கியா நிறுவனத்திற்கே உண்டான புலி-மூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

இந்த க்ரில் அமைப்பின் இரு முனைகளிலும் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் நேர்த்தியான ஹெட்லேம்ப் உள்ளது. பக்கவாட்டு பகுதி குறைவான ஸ்டைலிங் பேனல்களுடன் மிகவும் எளிமையாக கருப்பு நிற பில்லர்களுடன் காட்சியளிக்கிறது. காரின் நீளத்திற்கு இணையான சிங்கிள் ஷோல்டர் ரன்னிங் லைன் இறுதியாக எல்இடி டிஆர்எல்களை கொண்ட எல்இடி டெயில்லைட்டில் முடியலாம்.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

இது யூகிப்பான கருத்தே. ஏனெனில் புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி காரின் பின்புறம் மற்றும் உட்புற படங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. இருப்பினும் இந்த பகுதிகளில் கவனிக்கத்தக்க வகையிலான மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

அதேபோல் இந்த புதிய கார்னிவல் காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் அமைப்புகள் குறித்த தகவல்களையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் தற்போதைய 2.2 லிட்டர் டீசல் என்ஜினின் அப்டேட் வெர்சன் இந்த காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

அதேநேரம் சொரெண்டோ மாடலின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை தேர்வையும் புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி காருக்கு கியா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுமா அல்லது இல்லையா என்பது அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்த பின்பே தெரிய வரும்.

இப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..? டீசர் படம் வெளியீடு

இந்த எம்பிவி காரின் தோற்றம் உலகளவில் எப்படியிருந்தாலும் இந்த வருடத்திற்கு உள்ளாக வெளிவந்துவிடும். அதன்பின் செடோனா என்ற தனது வழக்கமான பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி காரை மிக விரைவிலேயே இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Next-Generation Kia Carnival MPV Teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X