ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ள சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி இந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் அனைத்து டீலர்ஷிப்களிலும் ரூ.25 ஆயிரம் என்ற முன் தொகையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

இந்த நிலையில் குறிப்பிட்ட சில டீலர்ஷிப்களில் சொனெட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த படங்கள் பெங்களூரில் உள்ள ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளன. இந்த ஷோரூமின் டீலர்கள் சொனெட்டை முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முதன்முறையாக வெளிக்காட்டுவதால் சிறிய நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

இருப்பினும் அனைத்து ஷோரூம்களுக்கும் இன்னும் சொனெட் சென்றடையவில்லை. இதனால் சொனெட்டை பெற்றுள்ள சில டீலர்களில் டெஸ்ட் ட்ரைவ் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. டெஸ்ட் ட்ரைவ்கள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸை போன்று கியா சொனெட்டும் ஹூண்டாய் வென்யூ காம்பெக்ஸ் எஸ்யூவி மாடலில் இருந்து தான் பெரும்பான்மையான பாகங்களை பெற்றுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸுகி உள்ளிட்டவை மட்டுமில்லாமல் சொனெட்டிற்கு போட்டியளிக்க டொயோட்டா அர்பன் க்ரூஸர், ரெனால்ட் கிகர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்டவையும் தயாராகி வருகின்றன.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

டெக்லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் முன்பதிவுகள் துவங்கப்பட்ட முதல் நாளிலேயே 6500-ஐ கடந்தது மட்டுமில்லாமல், மிக விரைவாகவே 10,000 என்ற மைல்கல்லையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

இந்திய சந்தையில் கடுமையான விற்பனை மோதல் நடைபெற்றுவரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் கார்களின் விலை அதிகப்பட்சமாகவே ரூ.12 -13 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. ஹூண்டாய் வென்யூவின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.75 லட்சத்தில் இருந்து ரூ.11.63 லட்சம் வரையில் உள்ளது.

ஷோரூம்களுக்கு வந்தடைந்த கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி... கொண்டாடி தீர்த்த டீலர்கள்...

இதே விலைகளில் கியா சொனெட் எதிர்பார்க்கப்பட்டாலும், காரின் ஆரம்ப விலை வென்யூவை காட்டிலும் ரூ.15 ஆயிரம் குறைவாகவே இருக்கும். அதேபோல் அதிகப்பட்சமாக சொனெட் ரூ.12.90 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படலாம்.

Image Courtesy: Shami D Rebel/Kia Sonet Club India

Most Read Articles

English summary
Kia Sonet Reaches Dealership
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X