கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

மிகவும் மலிவான கியா எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலாக செல்டோஸ் இவி அடுத்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

சீன சந்தைக்காக கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி மாடலின் எலக்ட்ரிக் வெர்சனின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்படவுள்ளதாகவும் இதற்கான வேலைகள் 2020 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாகவும் முன்னதாக இந்த 2020 வருட துவக்கத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

ஆனால் கியாவின் இந்த திட்டங்கள் அனைத்தும் கொரோனா வைரஸினால் தடைப்பட்டு போனது. இந்த நிலையில் தற்போது, செல்டோஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் உலகளாவிய அரங்கேற்றம் சீனாவில் அடுத்த ஆண்டில் (ஏப்ரலில்) இருக்கும் என்று கியா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

தென் கொரியாவை சேர்ந்த கியா இந்த மலிவான எலக்ட்ரிக் காரின் தயாரிப்பு பணிகளை சீனாவில் உள்ள அதன் டோங்ஃபெங் யூடா தொழிற்சாலையில் மேற்கொள்ளவுள்ளது. செல்டோஸ் எலக்ட்ரிக் காரில் ஹூண்டாய் கோனாவின் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு வழங்கப்படலாம்.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

இந்தியாவிலும் விற்பனையில் உள்ள ஹூண்டாய் கோனா இவி காரில் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 64kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 204 பிஎச்பி பவரை பெற முடியும். அதேநேரம் கியா கே3 இவி காரின் 56.5kWh பேட்டரி தொகுப்பும் செல்டோஸ் எலக்ட்ரிக்கில் வழங்கப்படலாம்.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

கியா செல்டோஸ் எலக்ட்ரிக் கார் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 450கிமீ தூரம் வரையில் இயங்கும் வகையில் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. தோற்றத்தில் வழக்கமான செல்டோஸிற்கும் அதன் புதிய எலக்ட்ரிக் வெர்சனிக்கும் சற்று வித்தியாசம் நிச்சயமாக கொண்டுவரப்படும்.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

முக்கியமாக, காரின் காற்றியக்கவியலை மேம்படுத்தும் விதத்தில் முன்பக்கத்தில் வழங்கப்படும் க்ரில் மூடப்பட்டிருக்கும். அதேபோல் எலக்ட்ரிக் கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக காரை சுற்றிலும் நீல நிற தொடுதல்களை பார்க்க முடியும். இதன் காரணமாக முன்பக்க பம்பர் மற்றும் அலாய் சக்கரங்களின் டிசைனில் மாற்றம் கொண்டுவரப்படலாம்.

கியாவின் மலிவான எலக்ட்ரிக் எஸ்யூவி கார், செல்டோஸ் இவி!! சீனாவில் தயாராகிறது..

மற்றப்படி தற்போதைய எல்இடி ஹெட்லைட்கள் & டிஆர்எல்கள் மற்றும் உட்பக்க கேபினின் வசதிகளில் மாற்றம் இருக்க வாய்ப்புகள் குறைவே. 2021ஆம் ஆண்டின் மத்தியில் உலகளாவில் வெளிகாட்டவுள்ளதாக கியா கூறியுள்ளதால், செல்டோஸ் எலக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் அடுத்த வருடம் முடிவதற்குள் நமக்கு தெரிந்துவிடும்.

Most Read Articles

English summary
Kia planning to launch seltos electric SUV by 2021.
Story first published: Tuesday, December 8, 2020, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X