புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா சொனெட் எஸ்யூவிக்கான புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

இந்தியாவில் கியா மோட்டார் அறிமுகப்படுத்திய செல்டோஸ், கார்னிவல் கார்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது கார் மாடலை களமிறக்கும் பணிகளில் கியா மோட்டார் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இடையில் கொரோனா பிரச்னையால் பெரும் இழப்புகளை சந்தித்தாலும், குறித்த நேரத்தில் மூன்றாவது கார் மாடலை கொண்டு வந்துவிடும் முனைப்பில் அந்நிறுவனம் உள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்தான் கியா மோட்டார் நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக இந்தியாவில் களமிறங்க உள்ளது. கியா நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட பட்ஜெட் கார் என்பதுடன், எஸ்யூவி ரகத்தில் வருவதால் பெரும் எதிர்பார்ப்பும், ஆவலும் எழுந்துள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் நிலையில் இருந்த சொனெட் கார் வரும் ஆகஸ்ட் 7ந் தேதி கியா சொனெட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் உலக அளவில் வெளியிடப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, செப்டம்பரில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

இந்த நிலையில், கியா சொனெட் எஸ்யூவிக்கு வரும் ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக கார் அண்ட் பைக் தளத்தில் செய்தி தெரிவிக்கிறது. இதன்மூலமாக, இந்த காரை ஆவலோடு காத்திருப்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கார் விற்பனைக்கு வந்தவுடன் டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

தீபாவளியையொட்டி பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். கியா சொனெட் எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக வர இருக்கிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

இதனால், ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள் கியா சொனெட் எஸ்யூவியிலும் வழங்கப்படும். அதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு நிரந்தர அம்சமாக இருக்கும். அத்துடன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வும் இடம்பெறும். இதுதவிர்த்து, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் ஐ-எம்டி எனப்படும் ஏஎம்டி வகை கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட உள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி புக்கிங் துவங்கும் தேதி குறித்த விபரம்!

ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் புதிய கியா சொனெட் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். செல்டோஸ் காரின் மினியேச்சர் மாடலாக கருதப்படுவதால், இந்த காருக்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
According to reports, KIA motor is planning to start pre-bookings for all new Sonet in India by August 7, 2020.
Story first published: Wednesday, July 29, 2020, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X