கியா சோல் கார் இந்திய வருகை விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்!

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கியா மோட்டார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் களமிறங்கியது. முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அடுத்து வநத் கார்னிவல் பிரிமீயம் எம்பிவி காரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

இந்த நிலையில், அடுத்து சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. சொனெட் எஸ்யூவியும் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

அடுத்து இந்தியாவிற்கான புதிய கார் மாடல்களை கியா பரிசீலித்து வருகிறது. அதில் டெலூரைடு எஸ்யூவியும் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, அடுத்து சோல் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பரிசீலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

இதுதொடர்பாக, கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள கியா மோட்டார் இந்தியா அதிகாரி மனோகர் பட்,"ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த சோல் காருக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டோம்.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

சோல் காரின் வித்தியாசமான டிசைன் இந்திய ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே, சோல் அல்லது அதற்கு இணையான கார் மாடலை இந்தியாவில் கொண்டு வருவதற்கு பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

இந்தியாவில் கியா சோல் காரின் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சோல் காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 147 பிஎச்பி பவரையும், 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

கியா சோல் கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும். அதாவது, கியா சொனெட் மற்றும் சோல் ஆகியவை வெவ்வேறு பட்ஜெட் மற்றும் விருப்பத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்படும்.

சோல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா திட்டம்!

இதனிடையே, மின்சார கார் மாடலையும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டமும் கியா மோட்டார் வசம் உள்ளது. ஆனால், அது சோல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்காது. ஏனெனில், விலை நிர்ணயம் அடிப்படையில், அதற்கான வர்த்தக வாய்ப்பு குறைவாக இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
South Korean car maker, Kia Motor is evaluating Soul petrol model and electric car for India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X