டீசல் கார்களுக்கு மட்டும் சிறப்பு சர்வீஸ் கேம்பைன்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல கார் நிறுவனம்

டீசல் கார்களுக்கு மட்டும் சிறப்பு சர்வீஸ் கேம்பைன் திட்டத்தை பிரபல கார் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இது எதற்காக என்பதை இந்த பதிவில் காணலாம்.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

கியா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் செல்டோஸ் எஸ்யூவி ரக காரும் ஒன்று. இந்த மாடலைக் கொண்டே தென் கொரியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்தது. எக்கச்சக்க அம்சங்களுடன் எதிர்பார்த்திராத விலையில் இக்கார் விற்பனைக்கு வந்த காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் தற்போதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

அதாவது, இந்தியாவில் இக்கார் அறிமுகமாகி ஒரு ஆண்டுகளைக் கடந்தும் நல்ல புக்கிங்கைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில், கியா நிறுவனம், மிக சமீபத்தில் விற்பனைச் செய்யப்பட்ட செல்டோஸ் கார்களை ரகசியமாக அழைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

இதுகுறித்து டீம் பிஎச்பி தளம் வெளியிட்ட தகவலில், கியா செல்டோஸ் காரின் டீசல் வேரியண்டே தற்போது திரும்பி அழைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் ப்யூவல் பம்புகளில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் சத்தமே இல்லாமல் செல்டோஸ் டீசல் எஞ்ஜினைக் கொண்ட கார்களின் உரிமையாளர்களை கியா நிறுவனம் தொடர்பு கொண்டு வருகின்றது. ஆனால், டீம் பிஎச்பி வெளியிட்ட தகவலால் இது தற்போது அம்பலமாகியுள்ளது.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

இதுகுறித்த தகவலை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பொது வெளியில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், கடந்த அக்டோபர் 5ம் தேதி அது வெளியிட்ட ஓர் தகவலின்படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, 1 அக்டோபர் 2019ம் முதல் 13 மார்ச் 2020 இடைப்பட்ட நாட்களில் தயாரிக்கப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்கள் மட்டுமே கோளாறு உள்ள பாகத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

அழைப்பைத் தொடர்ந்து இந்த சிக்கலைச் சந்திக்கும் கார்களின் பழுதான பாகங்கள் நீக்கப்பட்டு புதிய பாகங்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இதற்காகவே சத்தமே இல்லாமல் கியா நிறுவனம் செல்டோஸ் கார்களை திரும்பி அழைத்து வருகின்றது. ப்யூவல் பம்பில் இருக்கும் சில பிளாஸ்டிக்கினாலான பாகமே பழுதடைந்திருப்பது ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

இதையே கியா நிறுவனம் ரீபிளேஸ் செய்ய இருக்கின்றது. தற்போது திரும்பி அழைக்கப்பட்டிருக்கும் அனைத்து கார்களும் முதலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதில், பழுதான பாகம் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதனை கியா உடனடியாக நீக்கிவிடும். பின்னர், அதற்கு பதிலாக புதிய பாகம் பொருத்தப்படும்.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

குறிப்பாக, பழுதான பாகத்தால் அதிக அதிர்வு, எரிபொருள் பயன்பாடு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இதுபோன்ற அசௌகரியமான உணர்வுகளை நீக்கும் விதமாக கியா நிறுவனம் செல்டோஸ் கார்களை அழைக்கத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் டீசல் செல்டோஸ் காரும் பாதிக்கப்பட்டிருப்பதாக என்பதை அறிந்து கொள்ள சர்வீஸ் சென்டர் அல்லது டீலர்களை அணுகலாம்.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

அதேசமயம், கியா நிறுவனம் இதனை சத்தமே இல்லாமல் செய்து வருவதால், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை செல்போன் மூலம் ரகசியமாக அழைத்து சர்வீஸ் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடலாக மாறியிருக்கும் செல்டோஸ் காரின் டீசல் எஞ்ஜின், 1.5 லிட்டர் யு2 சிஆர்டிஐ எனும் தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சத்தமே இல்லாமல் செல்டோஸ் கார்களை அழைக்கும் கியா... ஆனா இப்போ மாட்டிக்கிட்டாங்க... எதற்காக இந்த அவசர அழைப்பு தெரியுமா?

இது 115 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைப் பெற்றிருக்கின்றது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் இந்த கார் 10.34 லட்சம் ரூபாயில் இருந்து 17.34 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
Kia Recalled Seltos Diesel Variants In India For Faulty Fuel Pump. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X