இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு கியா மோட்டார் நிறுவனம் அசத்தி இருக்கிறது. கியா நிறுவனத்தின் இந்த புதிய விற்பனை சாதனை குறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. செல்டோஸ் எஸ்யூவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, கார்னிவல், சொனெட் ஆகிய கார் மாடல்களை கொண்டு வந்தது. இந்த கார்களுக்கும் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும், நிறைவையும் தரும் வகையில் கியா கார்கள் இருந்து வருகின்றன.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

மேலும், இந்தியாவில் கியா மோட்டார் நிறுவனம் தனது கார்களின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தில் நேரடி இணைய வசதியை பெறும் வகையில் இ-சிம்கார்டு பொருத்தி விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

மேலும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும், வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்ஃபோனை் அல்லது பிரத்யே ஸ்மார்ட்வாட்ச்சுடன் இன்டர்நெட் வாயிலாக இணைப்பதற்காக யுவோ கனெக்ட் என்ற பிரத்யேக செயலியையும் வழங்குகிறது.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

இந்த இ-சிம்கார்டுக்கான மூன்று ஆண்டுகளுக்கான பயன்பாட்டுக் கட்டணத்தையும் கியா மோட்டார் இலவசமாக வழங்குகிறது. அதன்பிறகு, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாத சந்தா கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

இந்த யுவோ கனெக்டெட் செயலியை வைத்து கார்களின் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, அணைத்து வைப்பது, ஏசி சிஸ்டத்தை ஆன் செய்வது, கார் கதவுகளை மூடுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை காரின் வெளியில் இருந்தே ரிமோட் முறையில் செய்ய முடியும்.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

மேலும், கார் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங், கார் வேகத்தை கட்டுப்படுத்துவது மற்றும் கார் இயக்கம் பற்றிய பல்வேறு தகவல்களை பெறுவதற்கான வசதியையும் யுவோ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

விபத்து சமயங்களில் தானியங்கி முறையில் அருகாமையிலுள்ள அவசர உதவி மையங்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் வசதி உள்பட 57 விதமான வசதிகளை இந்த யுவோ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் பெற வழிவகை உள்ளது.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்ட கியா கார்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் 1 லட்சம் கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியுடன் கார்களை விற்பனை செய்துள்ளதாக கியா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட கார் விற்பனையில் கியா அசத்தல்!

அதாவது, 16 மாதங்களில் இந்த புதிய மைல்கல்லை கியா மோட்டார் நிறுவனம் தொட்டு அசத்தி இருக்கிறது. கியா செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள் மூலமாக இந்த புதிய விற்பனை சாதனையை மிக குறுகிய காலத்தில் கியா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Kia has announced that the company sold over 1 lakh cars equipped with its UVO connected car technology in India.
Story first published: Wednesday, December 16, 2020, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X