கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

சூப்பர் ஹிட் அடித்திருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடல் விரைவில் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் எஸ்யூவி மார்க்கெட்டின் நம்பர்-1 மாடலாக வலம் வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பையும், விற்பனையில் பல புதிய மைல்கல்லை மாதத்திற்கு மாதம் தொட்டு சாதித்து வருகிறது.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

இந்த நிலையில், இந்தியா தவிர்த்து, கியா மோட்டார் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் செல்டோஸ் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடலும் உருவாக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

இந்த நிலையில், கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் மூலமாக வெளி உலகுக்கு கசிந்துள்ளன.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடல் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. முதலாவதாக சீனாவில் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

சீனாவில் விற்பனையில் உள்ள கியா கேஎக்ஸ்3 எலெக்ட்ரிக் காருக்கு மாற்றாக மூன்றாம் தலைமுறை மாடலாக கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

ஹூண்டாய் க்ரெட்டா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட தற்போதைய கியா கேஎக்ஸ்5 எலெக்ட்ரிக் காரில் 45.2kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 111 பிஎச்பி பவரையும், 285 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 150 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது. இதனைிடையே, புதிய தலைமுறை கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் அங்கு அதிக சிறப்பம்சங்கள மற்றும் திறன் கொண்டதாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

சீனாவில் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதாவது, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பாணியில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட், பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இரண்டு ரேஞ்ச் கொண்ட மாடல்களில் செல்ல இருக்கிறது.

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது?

கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 யூனிட்டுகள் என்ற இலக்குடன் உற்பத்தி செய்யப்படும். கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் உடனடியாக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனினும், நிச்சயம் இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் மீது கியா மோட்டார் கண் வைக்கும்போது செல்டோஸ் எலெக்ட்ரிக் முதன்மையான தேர்வாக இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
Kia Motors entered the Indian market back in August 2019 with the Seltos SUV. The Kia Seltos positioned in the mid-size SUV segment in India received an extremely overwhelming response and soon became the best-selling car in the country as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X