புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

தென் கொரிய சந்தையில் கியா செல்டோஸ் காம்பெக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் 2021ஆம் ஆண்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் அப்டேட்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் செல்டோஸ் கிராவிட்டி என அழைக்கப்படும் இந்த அப்டேட் வெர்சனின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

செல்டோஸ் எஸ்யூவி மாடலின் புதிய டாப் ட்ரீம் ஆக நிலைநிறுத்தப்படவுள்ள கிராவிட்டி வெர்சன் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரண்டிலும் தோற்றத்தில் சிறிது மாற்றத்தை ஏற்றுள்ளது. இதன்படி முன்புறத்தில் 3டி க்ரோம் பாகங்களுடன் பிரத்யேகமான க்ரில் அமைப்பை பெற்றுள்ள இந்த கார் 18 இன்ச்சில் ஸ்போர்டியான தோற்றத்தில் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது.

புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

சில்வர் நிறமானது இதன் ஓஆர்விஎம்கள், கதவு ஹேண்டில்கள் மற்றும் ரப் ஸ்ட்ரீப்களில் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி காரின் வெளிப்புறத்தில் சில்வர நிற ஸ்கிட் ப்ளேட் மற்றும் பின்பகுதி தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. உட்புற கேபின் க்ரே நிற உள்ளமைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

வழக்கமான செல்டோஸ் மாடலில் இருந்து வேறுபடுவதற்காக முன்புறமாக கார் மோதுவதை தடுக்கும் வசதி, பின்புற பயணிகளின் நிலைப்பாட்டை கண்காணிக்கும் அமைப்பு போன்றவற்றை பெற்றுள்ளது. கிராவிட்டி உடன் சேர்த்து அப்டேட்டாக செல்டோஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஹை பீம் அசிஸ்ட்டை நிலையாக பெறவுள்ளன.

புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

புதிய டாப் ட்ரிம் காரில் மற்ற சிறப்பம்சங்களாக ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் இணைப்பு வசதியுடன் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் ஆடியோ சிஸ்டம், கேபினை சுற்றிலும் விளக்குகள், வயர்லெஸ் போன் சார்ஜர், பெரிய எம்ஐடி திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் கீலெஸ் எண்ட்ரீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

தென் கொரியாவில் வழக்கமான செல்டோஸ் மாடலை போல் செல்டோஸ் கிராவிட்டி மாடலும் 177 பிஎச்பி மற்றும் 265 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 136 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கக்கூடிய 1.6 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

புதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...

இந்த இரு என்ஜின்களுக்கும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் நிலையாகவும், ஆல்-வீல்-ட்ரைவ் திறன் கூடுதல் தேர்வாகவும் கொடுக்கப்படவுள்ளது. தற்சமயம் இந்தியாவில் செல்டோஸ் காருக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இதன் புதிய கிராவிட்டி வேரியண்ட்டையும் நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவருவது நல்ல முடிவாகவே இருக்கும். இருப்பினும் தற்சமயம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை கொண்டுவரவே தயாராகி வருகிறது.

Most Read Articles

English summary
Kia Seltos Gravity 177 PS with new grille, features debuts – TVC Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X