விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நெருங்குகிறது!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக மாறி இருக்கும் கியா செல்டோஸ் கார் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியா மோட்டார் நிறுவனம் முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது. இந்த எஸ்யூவிக்கு ஆரம்பம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஒரே கார் மாடலை வைத்துக் கொண்டு கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது கார் நிறுவனமாக மாறியது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

இந்த சூழலில், கியா செல்டோஸ் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது. அதாவது, அறிமுகம் செய்யப்பட்டு ஏழு மாதங்களில் இதுவரை 81,784 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விரைவில் ஒரு லட்சம் என்ற இலக்கை தொட்டுவிடும் வகையில் கியா செல்டோஸ் விற்பனை றெக்கை கட்டி பறநந்து வருகிறது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

மேலும், ஊரடங்கு உத்தரவால் கடந்த மாதம் கொரோனாவால் பெரிய அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 16ந் தேதி முதல் கியா செல்டோஸ் கார் டீலர்களுக்கு அனுப்பப்படவில்லை. முதல் 15 நாட்களில் மட்டும் 7,466 கியா செல்டோஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி என்ற பெருமையை கடந்த மாதமும் தக்க வைத்தது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

கியா செல்டோஸ் கார் வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்ததற்கு பல்வேறு காரணங்ளை அடுக்கலாம். அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள், சரியான விலை என வாடிக்கையாளர்களை வசியம் செய்து விட்டது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

கியா செல்டோஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் யுவோ கனெக்டெட் கார் செயலியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த செயலி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை பெற முடியும். அத்துடன், எஞ்சின், ஏசியை ரிமோட் முறையில் இயக்கும் வாய்ப்பும் உள்ளது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, லெதர் இருக்கைகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், பின்புற ஜன்னல்களுக்கு சன் ஷேடு உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஹில் ஹோல்டு கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா ஆகியவையும் உள்ளன.

விற்பனையில் றெக்கை கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ்... இமாலய சாதனையை நோக்கி பயணிக்கிறது!

கியா செல்டோஸ் கார் ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.32 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா வந்தாலும், கியா செல்டோஸ் எஸ்யூவியின் மார்க்கெட் ஸ்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
The Kia Seltos has managed to retain the title of the 'best-selling SUV' in the country for the third time in a row. The SUV registered 7,466 units of sales in the month of March 2020, to overtake its all-new Hyundai Creta.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X