ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

கியா நிறுவனம் ஸ்டானிக் என்ற சிறிய ரக எஸ்யூவி ரக காரை காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம் இந்திய வாகன சந்தையை ஒட்டுமொத்தமாக வளைத்துப்போடும் வகையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி வருகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நொய்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் எதிர்கால தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் இந்தியாவில் கால் தடம் பதித்த கியா மோட்டார்ஸ் நிறுவனமும் இதே நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

ஏற்கனவே, கார்னிவல் என்ற எம்பிவி ரக காரை இந்தியாவிற்கான இரண்டாம் மாடலாக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அதன் இந்தியச் சந்தையை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது நடைபெற்றிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அதன் எதிர்கால மாடலான ஸ்டோனிக் சிறிய எஸ்யூவி ரக காரை காட்சிப்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

இந்த கார் ஐரோப்பா மற்றும் தென் கொரியர்களின் கை வண்ணத்தில் டிசைன் தாத்பரியங்களைப் பெற்றிருக்கின்றது.

இதன் இருக்கை அமைப்பானது 5 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த கார் மற்ற சிறிய எஸ்யூவி-யைக் காட்டிலும் வித்தியாசமானதாக தோன்ற வேண்டும் என்பதற்காக நீளம், அகலம், உயரம் போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

இருப்பினும், இந்த கார் கியா செல்டோஸ் எஸ்யூவி மாடலின் லுக்கை லேசாகப் பெற்றிருக்கின்றது. இந்த காரில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 120 பிஎஸ் மற்றும் 171 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இதில், 7 ஸ்பீடு ஆட்டோ டிசிடி ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

மேலும், நாம் ஏற்கனவே கூறியதைப் போல் இந்த காரின் முன்பக்கத்தில் செல்டோஸ் எஸ்யூவி-யில் இடம்பெற்றிருப்பதைப் போன்று புலி மூக்கு அமைப்பைக் கொண்ட க்ரில் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

இதைத்தொடர்ந்து, ஸ்லீக் டைப்பிலான ஹெட்லேம்ப், ரூஃப் டிசைன் உள்ளிட்டவை சிறு மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஐந்து விதமான நிறத்தேர்வில் கிடைக்கும் இந்த கார் ட்யூவல் டோன் கலர் ஆப்ஷனிலும் சந்தையை கலக்க உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

இதுமட்டுமில்லைங்க, காரின் உள்ளே காணப்படும் ஒரு சில அம்சங்களை வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்துகொள்ளும் வசதியையும் இந்த கார் வழங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

இதேபோன்று, நவீன தொழில்நுட்ப வசதியிலும் கியா ஸ்டோனிக் அதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்வகையிலேயே உள்ளது. குறிப்பாக இன்டீரியரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள டச் ஸ்கிரீன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதில், இன்பில்ட் நேவிகேஷன் வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

மேலும், ஹீடட் முன் பக்க இருக்கை, க்ரூஸ் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரீ உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்ஜின் தேர்வையும் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வையும் வழங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா ஸ்டானிக்... இதுல என்ன சிறப்பு வசதி இருக்கு தெரியுமா..?

இதில், பெட்ரோல் எஞ்ஜின் 1.25 லிட்டரிலும், 1.4 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு யூனிட்டிலும், 1 லிட்டர் டர்போசார்ஜட் யூனிட்டிலும் கிடைக்கின்றது. ஆனால், டீசல் 1.6 லிட்டர் யூனிட்டில் மட்டுமே கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Kia Showcased Stonic At Auto Expo 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X