விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

பெரும் எதிர்பார்க்கு இடையே இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலுக்கு வழங்கப்படவுள்ள ஆக்ஸஸரீகளின் விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

கியா மோட்டார்ஸின் மூன்றாவது தயாரிப்பாக சொனெட் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் நுழையவுள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த எஸ்யூவி மாடலுக்கு வழங்கப்படவுள்ள ஆக்ஸஸரீகளில் சிலவற்றின் விபரங்கள் கார்தேக்கோசெய்திதளம் மூலமாக இணையத்தில் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

ஆக்ஸஸரீகளை பொதுவாக வாகனத்தை வாங்கும்போதே டீலர்கள் மூலமாக தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வகையில் சொனெட் சாதாரணமாகவே க்ரோம்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுதான் வருகிறது. இருப்பினும் கூடுதல் அழகிற்காக பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபாக்ஸ் வுட்களையும் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ள முடியும்.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

இதுமட்டுமின்றி முன் சக்கர ஆர்ச்களுக்கு பின்புறத்தில் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட பக்கவாட்டு வெண்ட்ஸ்களும் அதிகாரப்பூர்வ கூடுதல் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படவுள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட்டியரான தோற்றத்தை வழங்கினாலும், இவ்வாறான போலி துவாரங்கள் பொதுவாகவே குறைவாகவே வாடிக்கையாளர்களால் மதிப்பிடப்படுகின்றன.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

உபயோகப்படும் வகையிலான ஆக்ஸஸரீ என்று பார்த்தால், பம்பர் பாதுகாப்பான்கள் உள்ளன. கருப்பு நிறத்தில் சொனெட் உடன் கூடுதல் தேர்வாக வழங்கப்படவுள்ள இவை உண்மையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பாதுகாப்பானில் கொடுக்கப்பட்டுள்ள பளிச்சிடும் பாகங்கள் வெள்ளை நிற சொனெட்டிற்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

மேலும் கதவு விஸர்கள், முன்பக்க ஃபாக் விளக்குகள், பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், கதவு சில்கள், டெயில்லேம்ப்கள், பூட் லிட், பின்பக்க ஒளி பிரதிபலிப்பான் உள்பட சக்கர ஆர்ச்களிலும் அழகூட்டும் க்ரோம் ஆக்ஸஸரீகள் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

இவ்வளவு ஏன் கதவு ஹேண்டில்களுக்கு இடைப்பட்ட பகுதியை கூட க்ரோம் உடன் கூடுதலாக அழகுப்படுத்தப்பட்டு பெறலாம். செனெட்டின் ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டில் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட பக்கவாட்டு படிக்கட்டுகள் மற்றும் கதவு சில்களில் பிராண்டின் மெட்டல் தட்டுக்கள் உள்ளிட்டவையும் அடங்குகின்றன.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

நாங்கள் இந்த தொகுப்பில் கூறியிருப்பது சிலவற்றை மட்டும் தான். உட்புற கேபினில் வழங்கப்படுவை என மற்றவை அனைத்தும் சொண்ட்டின் இந்திய அறிமுகத்தின்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்டோஸை போல் டெக் லைன் & ஜிடி லைன் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் தான் சொனெட்டும் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

இதில் ஜிடி லைன், டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு வழங்கப்படவுள்ளன.

விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட்... எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்..?

ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவிகளின் போட்டியினை சமாளிக்கவுள்ள இந்த கியா தயாரிப்பின் விலை ரூ.6.6 லட்சத்தில் இருந்து ரூ.12.9 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

முன்னதாக சொனெட்டை ட்ரைவ் செய்யும் வாய்ப்பு ட்ரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. அதன்மூலம் காரை பற்றி நாங்கள் அறிந்து கொண்ட விபரங்கள் விமர்சனமாக வெளியிட்டுள்ளோம். அவற்றை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
Kia Sonet Accessories Revealed Ahead Of Launch6
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X