கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

கியா சொனெட் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

இந்திய சந்தையில் நுழைந்த உடனேயே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை கியா மோட்டார்ஸ் நிறுவனம் சம்பாதித்து விட்டது. அதன் முதல் இரண்டு தயாரிப்புகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பே இதற்கு சாட்சி. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த முதல் தயாரிப்பு செல்டோஸ். கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்து சுமார் 1 ஆண்டு மட்டுமே ஆகிறது.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

அதற்குள்ளாக இந்திய சாலைகளை கியா செல்டோஸ் ஆக்கிரமித்து விட்டது. இந்திய சந்தைக்கு புத்தம் புதிய நிறுவனம் என்ற போதிலும், கியாவின் முதல் தயாரிப்பிற்கே வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக கார்னிவல் காரை கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

இது விலை உயர்ந்த தயாரிப்பு என்ற போதிலும், அந்த விலையில் கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்களை கியா கார்னிவல் கவர்ந்திழுத்து வருகிறது. முதல் இரண்டு தயாரிப்புகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வரும் சூழலில், தற்போது இந்திய சந்தையில் தனது மூன்றாவது தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் தயாராகி விட்டது.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பை ஏற்படுத்தியுள்ள கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி கார்தான், இந்தியாவில் கியா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள மூன்றாவது தயாரிப்பு. கடந்த சில வாரங்களில், எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு? என்ற தகவலை தவிர கிட்டத்தட்ட கியா சொனெட் பற்றிய அனைத்து தகவல்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டது.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை கியா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை விபரம் வெளியிடப்படும். அப்போது அந்த தகவலை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். தற்போது கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவிக்கு முன்பதிவுகள் குவிந்து வரும் தகவலை இந்த பதிவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 6,523 புக்கிங்குகளை பெற்று, சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி ஏற்படுத்தியது. தற்போது இந்த எண்ணிக்கையானது, 10,000 யூனிட்களை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முதல் நாளில் கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கும் போது, அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது போலவே தோன்றுகிறது. டீசல் ஆட்டோமெட்டிக் பேஸ் (HTK+), டீசல் ஆட்டோமெட்டிக் டாப் (GTX+) மற்றும் பெட்ரோல் டர்போ ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஜிடி லைன் (GTX+) ஆகிய வேரியண்ட்களுக்கே நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் இவ்வளவு முன்பதிவுகளா? போட்டியாளர்களுக்கு வில்லனாக மாறும் கியா சொனெட்...

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா சொனெட் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு கியா சொனெட் வில்லனாக அமையவுள்ளது.

Most Read Articles

English summary
Kia Sonet Bookings Cross 10,000 Units - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X