மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்கள் அதன் செப்டம்பர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கார்னிவல் எம்பிவி மூலமாக இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த தயாராகவுள்ளது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கியா சொனெட்டின் தோற்றம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 5 இருக்கை அமைப்பை கொண்ட காராக வெளிவரவுள்ள இந்த கியா தயாரிப்பின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

செல்டோஸை போல் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் ஹூண்டாய் வென்யூ மாடலின் அதே ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை இந்த புதிய கியா கார் பகிர்ந்து கொண்டுள்ளது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

இந்த நிலையில் தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இந்த காரை பற்றிய விபரங்களில் சொனெட் நான்கு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரு பெட்ரோல் மற்றும் இரு டீசல் என்ஜின்கள் அடங்குகின்றன.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

இந்த வகையில் இதன் பெட்ரோல் வேரியண்ட்கள் பெற்றுள்ள 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ என்ஜின் 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

அதுவே டர்போ வேரியண்ட்டிற்கு 6 ஐஎம்டி மற்றும் 7 டிசிடி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர்த்து மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட போவதில்லை. டீசல் மாடலில் செல்டோஸில் வழங்கப்பட்டு வருகின்ற அதே 1.5 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படவுள்ளது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

ஆனால் இந்த டீசல் என்ஜின் சொனெட்டில் 100 பிஎச்பி/240 என்எம் மற்றும் 115 பிஎச்பி/250 என்எம் டார்க் திறன் என்ற இரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படவுள்ளது. அதாவது 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் ஒரு விதமான ஆற்றல்களையும், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் மற்றொரு விதமான ஆற்றல்களையும் இந்த டீசல் என்ஜின் வெளிப்படுத்தும்.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

இந்த என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்கள் மட்டுமில்லாமல் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிலேயே முதல் கார் மாடலாக 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை சொனெட் பெறவுள்ளதையும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

செல்டோஸில் இருந்து பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கும் வசதி கொண்டது. இதனுடன் மடக்கும் வசதி கொண்ட ஒட்டுனர் இருக்கை உள்பட முன்புற இருக்கைகளும் கியா சொனெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

ஹூண்டாய் எலண்ட்ரா, க்ரெட்டா, வெர்னா, கியா செல்டோஸ், கார்னிவல் உள்ளிட்டவற்றில் மட்டுமே பொருத்தப்பட்டு வருகின்ற இத்தகைய வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் முதன்முறையாக சொனெட்டின் மூலமாக இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் நுழைகிறது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

மேலும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வைரஸை கண்டறியும் சிஸ்டத்துடன் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பானையும் இந்த எஸ்யூவி காரில் கியா நிறுவனம் பொருத்தியுள்ளது. திரையுடன் வழங்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பான் மூலம் இரு நிலைகளில் கேபினின் காற்றை சுத்திகரிக்கலாம்.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

இவை மட்டுமின்றி 57 வசதிகளுடன் யுவிஒ கனெக்டட், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், டயரின் அழுத்தத்தை கவனிக்கும் சிஸ்டம் மற்றும் பிரிவில் முதல் காராக முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவற்றையும் சொனெட்டில் கியா நிறுவனம் வழங்கியுள்ளது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

இவற்றில் யுவிஒ கனெக்ட்டில் யுவிஒ வாய்ஸ் அசிஸ்ட் வசதியையும் கொடுக்கப்பட்டுள்ளது. டயரின் அழுத்தத்தை கவனிக்கும் சிஸ்டத்தை யுவிஒ செயலி மூலமாகவும் சரிபார்க்க முடியும். இவை தவிர்த்து டாப் ஜிடி லைன் வேரியண்ட்டிற்கு மட்டும் கூடுதல் பாதுகாப்பிற்காக ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற எஸ்யூவிகளை காட்டிலும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்... என்னென்ன தெரியுமா...?

அதேபோல் இந்த டாப் வேரியண்ட்டில் மட்டுமே நார்மல், ஈக்கோ & ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ட்ரைவிங் மோட்கள் கொடுக்கப்படவுள்ளன. மேலும் முன் மற்றும் பின்புறத்தில் எல்இடி விளக்குகளையும் டாப் வேரியண்ட்கள் மட்டுமே பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
Kia Sonet Brochure Leaks Ahead of Launch in Sep 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X