கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது, புத்தம் புதிய கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டெலிவிரி பணிகள் இந்தியா முழுவதும் துவங்கியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரை மிக பெரிய எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கி சந்தைப்படுத்தியுள்ளது. இதனால் அறிமுகத்திற்கு முன்னதாகவே சுமார் 25000 முன்பதிவுகள் இந்த எஸ்யூவி காரின் மீது நடந்துள்ளன.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

இந்த முன்பதிவுகளுக்கு முன்தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் இந்தியாவில் உள்ள டீலர்கள் மட்டும் சுமார் 62.5 கோடி ரூபாயை ஒரு மாதத்தில் ஈட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000 சொனெட் காருக்கான முன்பதிவுகள் நடைபெறுவதாக கியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

இதில் பெரும்பான்மையான முன்பதிவுகள் சொனெட்டின் ஜிடிஎக்ஸ்+ ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் வேரியண்ட்களின் மீதுதான் நடைபெறுகின்றன. இந்த வேரியண்ட்களின் விலைகளை இன்னும் கியா நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

டீலர்களின் கூற்றுபடி இவற்றின் விலை ரூ.12.99 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் இவற்றின் ஆன்-ரோடு விலை ரூ.15 லட்சத்தை இந்தியாவின் அனைத்து நகரத்திலும் தொட்டுவிடும். ஏனெனில் ஜிடிஎக்ஸ்+ டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூ விலை ரூ.11.99 லட்சமாக இருப்பினும், ஆன்-ரோடு விலை ரூ.14.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

அதேநேரம் முழுவதும் நிரப்பப்பட்ட கியா சொனெட் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.16 லட்சத்தை கடப்பதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக இந்திய சந்தையின் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சொனெட் மாடல்தான் விலையுயர்ந்ததாக விளங்கவுள்ளது.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

அதேபோல் பட்ஜெட் பார்த்து காரை வாங்குவோரையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஏமாற்றவில்லை. ஏனெனில் அத்தகையவர்களுக்காக சொனெட்டின் ஆரம்ப நிலை எச்டிஇ ட்ரிம் வெறும் ரூ.6.71 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்று வந்துள்ளது.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

டாப் வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்படாததினால்தான் அவற்றிற்கு இவ்வாறு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுவும் கியாவின் ஒருவகை வியாபார தந்திரமே. இதனால் நீங்கள் விலைகளை கருத்தில் கொள்பவர் என்றால், சொனெட்டின் டாப் வேரியண்ட்களை வாங்கும் யோசனையை சில நாட்களுக்கு தள்ளி போடுவதுதான் சிறந்தது.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

ஜிடிஎக்ஸ்+ பெட்ரொல் டிசிடி மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் ட்ரிம்களின் விலைகள் வெளியிடப்படாததற்கு கியா நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை போல் சொனெட்டும் பட்ஜெட் ரக காராக தெரிவது மட்டும் உண்மை.

கியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..?

இதற்கிடையில்தான் தற்போது மற்ற ட்ரிம்களின் டெலிவிரி பணிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளது. முன்பதிவு செய்த முதல் தொகுப்பு வாடிக்கையாளர்கள் காரை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளனர். இந்த வகையில் முதல் தொகுப்பு வாடிக்கையாளர்களுள் ஒருவரான அகமதாபாத்தை சேர்ந்த ஷைலேஷ் கோர் என்பவர் தனது சொனெட் காரை டீலர்களிடம் பெற்று கொண்டுள்ளார். அதன் படங்களை தான் இந்த செய்தியில் பார்க்கிறீர்கள்.

Image Courtesy: Shailesh Gor

Most Read Articles

English summary
Kia Sonet Delivery Started. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X