சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் மிகச் சிறந்த மைலேஜ் வழங்கும் கார் மாடல்களில் ஒன்றாக கியா சொனெட் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கான மார்க்கெட்டில் தொடர்ந்து புதிய மாடல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த ரகத்தில் சந்தைப் போட்டியை மனதில் வைத்து மதிப்பு வாய்ந்த மாடலாக தங்களது தயாரிப்பை நிலைநிறுத்த கார் நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

அந்த வகையில், கியா மோட்டார் நிறுவனம் தனது சொனெட் எஸ்யூவியை அனைத்து விதத்திலும் மதிப்புவாய்ந்த மாடலாக நிலைநிறுத்தும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறது. இந்தியர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பல விஷயங்களை மனதில் வைத்து தனது சொனெட் எஸ்யூவியை உருவாக்கி இருக்கிறது.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

அதில், கியா சொனெட் எஸ்யூவியின் மைலேஜ் மிகவும் மெச்சத் தகுந்த விதத்தில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் கார் வாங்கும்போது பரிசீலிக்கும் மிக முக்கிய விஷயமாக மைலேஜ் உள்ளது.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

இந்த நிலையில், கியா சொனெட் எஸ்யூவியின் அராய் சான்று மைலேஜ் விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளது. எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளின் அடிப்படையில், மைலேஜ் விபரங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

கியா சொனெட் எஸ்யூவியின் 82 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வர இருக்கிறது. இந்த மாடலானது லிட்டருக்கு 18.4 கிமீ மைலஜை வழங்கும் என்று அராய் சான்றளித்துள்ளது.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

அடுத்து 118 பிஎச்பி பவரை வழங்கும் திறன்கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஐஎம்டி (ஏஎம்டி ஆட்டோமேட்டிக் வகை) மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் ஐஎம்டி மாடலானது லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும், டிசிடி மாடலானது லிட்டருக்கு 18.3 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிய வந்துள்ளது.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

இந்த எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 108 பிஎச்பி மற்றும் 113 பிஎச்பி என இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறனில் கொடுக்கப்பட உள்ளது. இதன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும் வழங்கும்.

சிறந்த மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவியாக வரும் கியா சொனெட்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள்தான் கியா சொனெட் எஸ்யூவியிலும் வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில், கியா சொனெட் எஸ்யூவி சற்றே கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதத்தில், ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Kia Sonet fuel economy figures revealed ahead of launch in September.
Story first published: Friday, August 28, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X