அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் முதல் தொகுப்பு மாதிரி கார் டீலர்ஷிப் ஒன்றை சென்றடைந்துள்ளது. இதுகுறித்து டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ள படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

இந்திய சந்தைக்கு புதிய நிறுவனமான கியா மோட்டார்ஸின் புதிய தயாரிப்பாக சொனெட் எஸ்யூவி அடுத்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. அதற்கு முன்னதாக தான் தற்போது திரையில் காட்டப்படுவதற்காக கியா சொனெட் மாதிரி கார் ஒன்று ஹைதராபாத் டீலர்ஷிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

சொனெட் கார்களின் தயாரிப்பு பணிகள் ஆந்திரா, அனந்த்பூரில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஹைதராபாத்திற்கு சென்றிருப்பது 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் உள்ள சொனெட்டின் உயர்நிலை வேரியண்ட் ஆகும்.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து விற்பனைக்கு வரவுள்ள சொனெட், பிரிவில் முதல் கார் மாடலாக 30க்கும் மேற்பட்ட அம்சங்களை வெளிப்புறம், உட்புற சவுகரியம், இன்ஃப்டெயின்மெண்ட் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவற்றில் பெற்றுள்ளது.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

தோற்றம் தான் அதிகளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், எல்இடி ஹெட்லேம்ப்கள் காருக்கு க்ரீடம் போன்றும். பக்கவாட்டு டர்ன் இண்டிகேட்டர்களுடனான எல்இடி டிஆர்எல்கள் இதயத்துடிப்பு வடிவிலும் பொருத்தப்பட்டுள்ளன.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

மற்ற சிறப்பம்சங்களாக தானியங்கி ஹெட்லேம்ப்கள், ப்ரோஜெக்டர் ஃபாக் விளக்குகள் மற்றும் ஒளி பிரதிப்பலிப்பான் ஸ்ட்ரிப் உடன் இதயத்துடிப்பு வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை 3,995மிமீ நீளம், 1,790மிமீ அகலம் மற்றும் 1,647மிமீ உயரம் கொண்ட இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளதாக இதுவரை கசிந்துள்ள ஆவணங்கள் கூறுகின்றன.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

211மிமீ கிரவுண்ட் க்ளியரென்ஸ் உடன் உள்ள இந்த கியா காரில் வீல்பேஸ் 2,500மிமீ என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தை மெருக்கும் விதமாக தற்போது அறிமுக காட்சிக்காக வந்துள்ள காரை சுற்றிலும் டர்போ வடிவத்தில் ஸ்கிட் ப்ளேட், பின்புறத்தில் இரட்டை மஃப்லர் & டிஃப்யூஸர், சுறா துடிப்பு வடிவிலான ஆண்டெனா, மேற்கூரை மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை உள்ளன.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

லக்சரி தோற்றத்தில் காட்சியளிக்கும் இதன் கேபினில் கருப்பு நிறத்தில் மடக்கும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை மற்றும் பயணிகள் இருக்கைகள், எல்இடி விளக்குகள், வயர்-இல்லா ஸ்மார்ட்போன் இணைப்பு, ரீமோட் என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஒடிஏ வரைப்பட அப்டேட்கள் போன்றவை நிரம்பி வழிக்கின்றன.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

இவை மட்டுமின்றி 57 இணைப்பு வசதிகளுடன் யுவிஒ தொழிற்நுட்பம், 10.25 இன்ச் தொடுத்திரை சிஸ்டம் மற்றும் சப் வூஃபர் உள்ளிட்டவையும் உள்ளன. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு உணர்வை தருவதற்காக புதிய காற்று சுத்திகரிப்பானையும் சொனெட்டில் கியா நிறுவனம் பொருத்தியுள்ளது.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

இதனுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், ப்ரேக் அசிஸ்ட், முன் & பின் பார்க்கிங் சென்சார்ஸ், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கைகள் மற்றும் இபிடியுடன் ஏபிஎஸ், இஎஸ்சி, எச்ஏசி மற்றும் விஎஸ்எம் உள்ளிட்டவையும் உள்ளன.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

கியா சொனெட்டில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின், 1.0 லிட்டர் டர்போசார்ஜ் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 7-ஸ்பீடு டிசிடி, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு ஐஎம்டி என்ற ஐந்து விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அறிமுகத்திற்கு அனைத்து விதங்களிலும் தயாராகும் கியா சொனெட்... செப்டம்பரில் அறிமுகம்...

ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்ட முன்பதிவுகளில் சக்கை போடு போட்டுவரும் கியா சொனெட் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்தே தயாரிப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளது. இதனால் காரை முன்பதிவு செய்பவர்கள் நிச்சயம் காத்திருப்பு காலத்தை கடந்தாக வேண்டும்.

Most Read Articles
English summary
Kia Sonet Display Car Arrives At Dealer
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X