கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

அடுத்த மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய கியா சொனெட் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டைலான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சரியான விலையில் வரும் என்பதால், மிகவும் மதிப்புவாய்ந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

கடும் சந்தைப் போட்டி மிகுந்த 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்படும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், கூடுதல் மதிப்பை தரும் விதத்தில் இந்த புதிய சொனெட் எஸ்யூவியை நிலைநிறுத்த கியா மோட்டார் வர்த்தக கொள்கைகளை வகுத்துள்ளது. அதன்படி, செல்டோஸ் போன்றே இந்த எஸ்யூவியிலும் இரண்டு விதமான மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

இதற்காக, செல்டோஸ் எஸ்யூவியை போன்றே, இந்த புதிய சொனெட் எஸ்யூவியிலும் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களுக்கு கீழ் வேரியண்ட் தேர்வுகளை அளிக்க இருக்கிறது கியா மோட்டார்ஸ்.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

மேலும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் டெக் லைன் மாடலிலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது ஜிடி லைன் என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் தோற்றத்திலும், உட்புற தோற்றத்திலும் சில வேறுபாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

சொனெட் டெக் லைன் மாடலின் க்ரில் அமைப்பும், ஜிடி லைன் க்ரில் அமைப்பிலும் வேறுபாடுகள் உள்ளன. அதாவது, க்ரில் டிசைன் ஒன்றாக இருந்தாலும், ஜிடி லைன் மாடலின் க்ரில் அமைப்பில் உள்ள சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட வில்லைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்தோடு, ஜிடி லைன் என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. இது காரின் முக வசீகரத்தை வெகுவாக ஈர்க்கிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

அத்துடன, ஜிடி லைன் ஏர்டேம் அமைப்பு வித்தியாசப்படுகிறது. ஏர்டேம் மற்றும் பம்பர் அமைப்பில் சில்வர் வர்ண பூச்சுடன் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. இது டெக் லைன் வேரியண்ட்டில் இல்லை என்பதால், ஜிடி லைன் எளிதாக வேறுபடுகிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

பக்கவாட்டிலும் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இரட்டை வண்ண அலாய் வீல்களில் சிவப்பு வண்ண காலிபர்கள் இடம்பெற்றுள்ளன. ஜிடி லைன் மாடலில் டோர் ஸ்கர்ட்டுகள், சிவப்பு வண்ண வீல் ஹப் ஆகியவை தனித்துவப்படுத்துகின்றன.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

பின்புறத்தில் கருப்பு வண்ண ஸ்கிட் பிளேட், எல்இடி டெயில் லைட்டுகள், ரிஃப்லெக்டர் ஸ்டிக்கர் ஆகியவையும் ஜிடி லைன் மாடலின் முக்கிய அம்சங்களாகவும், அதிக வசீகரமாகவும் இருக்கிறது. டெல் லைன் மாடலில் சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

வெளிப்புறத்தை போன்று உட்புறத்தில் இரண்டு மாடல்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால், சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜிடி லைன் மாடலில் உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது. சிவப்பு வண்ண நூல் தையல் வேலைப்பாடுகள் அலங்காரமாக தெரிகிறது. ஆனால், டெக் லைன் வேரியண்ட்டுகளில் கருப்பு - பீஜ் வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

ஜிடி லைன் மாடலில் இருக்கைகள் கருப்பு வண்ணத்திலும், சிவப்பு வண்ண நூல் தையல் அழகை கூட்டுகிறது. அத்துடன், ஸ்போர்ட்ஸ் பெடல்களும் இடம்பெற்றுள்ளன. ஏசி வென்ட்டுகள் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது. டெக் லைன் வேரியண்ட்டுகளில் ஏசி வென்ட்டுகள் சில்வர் வர்ண அலங்காரத்த்துடன் காட்சி தருகிறது.

 கியா சொனெட் டெக் லைன் Vs ஜிடி லைன்: வேறுபாடுகள் என்னென்ன?

வசீகரிக்கும் ஜிடி லைன்

கச்சாமுச்சா இல்லாமல் அழகான சிவப்பு வண்ண அலங்கார விஷயங்கள் ஜிடி லைன் மாடலுக்கு அதிக வலு சேர்க்கிறது. அத்துடன், ஜிடி லைன் மாடலின் கீழ் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகளில் சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின் தேர்வும் கூடுதல் மதிப்பை வழங்கும். மொத்தத்தில், அர்பன் எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் அத்துனை அம்சங்களும் சொனெட் ஜிடி லைன் வேரியண்ட்டில் உள்ளன. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் அடுத்த மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here are the important differences between Kia Sonet Tech line and GT line variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X