ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

கியா மோட்டார்ஸின் புதிய தயாரிப்பான சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாக அனைத்து தயாராகி வருகிறது. இந்த வகையில் டீலர்ஷிப்களுக்கு இதன் விற்பனை மாதிரிகள் வந்தடைய துவங்கியுள்ளன.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

கியா சொனெட் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு ஏற்கனவே வந்தடைய துவங்கிவிட்டது. ஆனால் அவை எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ட்ரைவிற்கு கொடுக்கப்படும் கார்களாகும். தற்போது வந்து சேர்ந்திருப்பதுதான் விற்பனை மாடல்களாகும்.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

இதனால் இவை தான் முன்பதிவு செய்து காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வார இறுதியில் இருந்து டெலிவிரி செய்யப்படவுள்ளன. சொனெட்டை பற்றிய கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் வெளிவந்துவிட்டன.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

காரின் எக்ஸ்ஷோரூம் விலை மற்றும் விலை குறைவான வேரியண்ட்களும், விலைமிக்க வேரியண்ட்களும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பது மட்டும்தான் தற்போதைக்கு நமக்கு தெரிய வேண்டியவை. கியா நிறுவனம் சொனெட்டின் வேரியண்ட்களின் விபரங்களையும் ஏற்கனவே வெளியிட்டுவிட்டது என்னமோ உண்மை தான்.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

ஆனால் அவை சொனெட்டின் டாப் ஜிடி லைன் மற்றும் டெக் லைன் வேரியண்ட்கள் மட்டுமே ஆகும். இதில் சொனெட்டின் எச்டிகே+ வேரியண்ட் வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்துவருகிறது. ஏனெனில் தற்காலத்திற்கு தேவையான வசதிகள் அனைத்தும் கணிசமான என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

இதனால் இதன் விலையை நாம் எதிர்பார்ப்பதை விடவும் சற்று ப்ரீமியமாகவே கியா நிர்ணயிக்கும். இதுதான் தற்போது டீலர்ஷிப்பிற்கு சொந்தமான பகுதிகளை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த வீடியோவினை டுஷார் திங்ரா என்ற யூடியுப் சேனல் வெளியிட்டுள்ளது.

இதன்படி பார்க்கும் சொனெட்டின் இந்த டாப் எச்டிகே+ வேரியண்ட் வெளிப்புறத்தில் மூடுபனி விளக்குகள், வீட்டை பின் தொடரு என்ற வசதியுடன் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், முன் மற்றும் பின்புறத்தில் ஸ்கிட் தட்டுகள், நகரக்கூடிய வகையில் மேற்கூரை ரெயில்கள், சுறாவின் துடுப்பு வடிவில் ஆண்டெனா, 16 இன்ச்சில் மெட்டாலிக் சில்வர் சக்கரங்கள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

அதேபோல் உட்புற கேபினில் வெள்ளை தையல்களுடன் கருப்பு நிறத்தில் லெதர் இருக்கைகள், லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் & கியர் க்னாப், உயரத்தை சரி செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பவர் ஜன்னல்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, பின்பக்கத்தில் டீஃபாக்கர் & பார்சல் அலமாரி, அர்காமைஸ் ட்யூனிங் உடன் 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை உள்ளதை பார்க்க முடிகிறது.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

பாதுகாப்பிற்கு இந்த டாப் வேரியண்ட்டில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், முன்பக்க டிஸ்க் ப்ரேக்குகள், அவசரகால ஸ்டாப் சிக்னல்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். அதேபோல் இயக்க ஆற்றலுக்கு மூன்று என்ஜின் தேர்வுகள் சொனெட் எச்டிகே+ வேரியண்ட்டில் வழங்கப்படவுள்ளன.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போ என்ஜின் 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

ஷோரூம்களுக்கு வந்தது கியா சொனெட்டின் டாப் எச்டிகே+ வேரியண்ட்... இந்த வார இறுதியில் டெலிவிரி ஆரம்பம்

இவற்றில் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் ட்ரான்ஸ்மிஷனும் இணைக்கப்பட்டிருக்கும். டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

சொனெட் எச்டிகே+ வேரியண்ட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7.7 லட்சத்தில் இருந்து ரூ.10.5 லட்சம் வரையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Kia Sonet HTK+ Mid Variant Arrives At Dealer Yard
Story first published: Tuesday, September 15, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X