Just In
- 41 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையை போல் மைலேஜிலும் டஃப் கொடுக்கும் கியா சொனட்! வெனியூவை அடித்து நொறுக்க இதுபோதும்!
புதிய கியா சொனட் எஸ்யூவி காரின் மைலேஜ் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெறும் கார்களில் ஒன்றாக கியா நிறுவனத்தின் புதிய வெளியீடான சொனட் மாறியிருக்கின்றது. இதன் ஸ்டைல், தொழில்நுட்ப வசதி மற்றும் விலை உள்ளிட்டவை அடக்கமானதாக இருப்பதனால் இந்தியர்கள் சொனட்டிற்கு அமோகமான வரவேற்பை வழங்க தொடங்கியிருக்கின்றனர்.

இதனால், கொரிய நாட்டு நிறுவனம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கின்றது. இந்நிலையில், கியா நிறுவனத்தின் இந்த மகிழ்ச்சியைக் கூடுதலாக்கக் கூடிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த கார் பற்றிய மைலேஜ் தகவல்தான் அது.

அண்மையில் மிக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகமான காராக இருக்கின்றது ஹூண்டாய் வென்யூ. இக்கார், புதிய கனெக்டட் தொழில்நுட்பத்துடன் ரூ. 5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமானது. இந்த விலைக்குறைந்த காரைக் காட்டிலும் தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் கியா சொனட் சற்று அதிக மைலேஜை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை வாகனங்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இந்திய அமைப்பான அராய் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
கியா நிறுவனத்தின் இந்த புதிய எஸ்யூவி கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் ஆகியைவை ஆகும்.

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 18.4 கி.மீட்டரை, ஒரு லிட்டருக்கு மைலேஜாக வழங்கும் என அராய் தகவல் வெளியிட்டுள்ளது. இதே எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் ஹூண்டாய் வெனியூ அதிகபட்சமாக 17.52 கி.மீட்டரை மட்டுமே ஒரு லிட்டருக்கு மைலேஜாக வழங்குகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதே திறனைதான் ஹூண்டாய் வென்யூவில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினும் வெளியேற்றுகின்றது.

1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல், இந்த எஞ்ஜின், அராய் வெளியிட்டுள்ள தகவலின்படி, 18.2 கிமீ முதல் 18.3 கிமீ வரை மைலேஜை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. ஐஎம்டி மற்றும் 7 டிசிடி தேர்வில் கிடைக்கும் இந்த எஞ்ஜின் அதிபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதே திறனுடன் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜின் அதிகபட்சமாக 18.15 கிமீ மைலேஜே வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல், இந்த எஞ்ஜினைக் கொண்டிருக்கும் கியா சொனட் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வைக் கொண்டிருக்கும் சொனட் 24.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்கும் சொனட் 19.0 கிமீ மைலேஜையும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அதேசமயம், ஹூண்டாய் வெனியூவில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜினானது 23.4 கிமீ வரையிலான மைலேஜை மட்டுமே வழங்குகின்றது. மேலும், வெனியூவில் டீசல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலே பார்த்த மைலேஜ் விவரங்கள் துள்ளியமாக பட்டியல் வாயிலாக கீழே காணலாம்.
சொனட் | மைலேஜ் | 0-100 கிமீ | பிஎஸ் திறன் | என்எம் டார்க் |
1.2 P, 5MT | 18.4 kmpl | 13.3 s | 83 | 115 |
1.0 P, iMT | 18.2 kmpl | 12.3 s | 120 | 172 |
1.0 P, 7DCT | 18.3 kmpl | 11.3 s | 120 | 172 |
1.5 D, 6MT | 24.1 kmpl | 12.3 s | 100 | 240 |
1.5 D, 6AT | 19.0 kmpl | 11.8 s | 115 | 250 |

அமோக வரவேற்பு...
கியா சொனட், அதன் மூதாதையாரான செல்டோஸ் எஸ்யூவி காரைப் போலவே நல்ல டிமாண்டைப் பெற்றிருக்கின்றது. இந்த காருக்கு தற்போது வரை 6,500 யூன்ட்டிற்கும் அதிகமான புக்கிங் கிடைத்துள்ளது. இந்த காருக்கு ரூ. 25 ஆயிரம் என்ற முன் தொகையில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்த முன்பதிவு தொகை மூலமாக மட்டுமே 16.25 கோடி வரை கல்லாக்கட்டியுள்ளது கியா. அதுவும் வெறும் 24 மணி நேரத்திலேயே.

Source: Rushlane
எனவே, கியா சொனட் இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகும் கார் என்ற புகழைச் சூடியிருக்கின்றது. மேலும், ஒரு வருடத்திற்கு உள்ளாகவே இக்கார் 1 லட்சம் வரையிலான யூனிட் விற்பனையைத் தொடும் என யூகிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இக்கார் ஓர் புதிய சாதனையாளாரகவே இந்தியாவில் பார்க்கப்படுகின்றது.