கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

பார்த்தவுடனே பார்வையாளரை கவரும் விதத்தில் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் காரை மிக சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.71 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷோரூம்களில் இந்த காரின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுவிட்டன.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

இந்த வகையில் சொனெட் காரை வாங்கிய பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது காரை அருமையான தோற்றத்திற்கு மாடிஃபை செய்துள்ளார். இதுகுறித்து பிராசாந்த் சுவாமிநாதன் என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில் சாடின் கருப்பு நிறத்தில் மாடிஃபை சொனெட் காரை பார்க்கலாம்.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

கருப்பு நிற பெயிண்ட் மட்டுமின்றி க்ரோம்களும் முன்பக்க க்ரில், வெளிபக்க கதவு கைப்பிடிகள் உள்பட காரை சுற்றிலும் உள்ளன. சில்வர் நிறத்திலான மேற்கூரை தண்டவாளங்கள் பளபளப்பான கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

இவை மட்டுமின்றி காரின் உரிமையாளர் சற்று அட்வான்ஸாக 16 இன்ச்சில் ஜிடிஆர் ப்ரோ அலாய் சக்கரங்களையும் பொருத்தியுள்ளார். இத்துடன் வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் முடிகிறது. உட்புறத்தில் கேபின் முழுக்க முழுக்க கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரசாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

இருப்பினும் காரின் உட்பக்க படங்கள் எதையும் பிரசாந்த் பதிவிடவில்லை. இது சொனெட்டின் எச்டிஎக்ஸ் வேரியண்ட் ஆகும். இதனால் உட்புறத்தில் தொழிற்நுட்ப வசதிகள் மிக அதிகமாக இல்லை என்றாலும் ஆரம்ப நிலை வேரியண்ட்டை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

ஏனெனில் எச்டிஎக்ஸ் சொனெட்டின் மத்திய டெக்-லைன் ட்ரிம் நிலையாகும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக உள்ளது. இந்த காரின் உரிமையாளர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்த காரை ஷோரூமில் டெலிவிரி எடுத்துள்ளார். அப்போதே கார் மாடிஃபை பணிகளுக்கு உட்படுத்தப்பட்டதினால் தான் இவ்வளவு சீக்கிரமாக பணிகள் நிறைவடைந்துள்ளன.

கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்! அசத்திய பெங்களூர் வாடிக்கையாளர்

இந்த மாடிஃபை சொனெட் எச்டிஎக்ஸ் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு ஐஎம்டி ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles
English summary
This Custom Wrapped Sonet Is The Black Edition We Wish To See From Kia
Story first published: Thursday, October 22, 2020, 2:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X