காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மூன்றாவது தயாரிப்பை சொனெட் என்ற பெயரில் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு இடையில் தற்போது இந்த எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் முயற்சியாக புதிய டிவிசி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள புதிய கியா சொனெட்டின் உலகளாவிய அறிமுகம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் இருந்து நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த புதிய கியா தயாரிப்பு அடுத்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவற்றுடன் விற்பனையில் போட்டியிடவுள்ள இந்த எஸ்யூவி காரின் தற்போதைய டிவிசி வீடியோ ஆனது கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கியா சொனெட் கார் ஒன்றில் இளைஞர் ஒருவர் தனது நண்பரை அழைத்து செல்வதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வீடியோ, அதன்பின் வெளியே கார் கரடுமுரடான காட்டு பாதைகளை சமாளித்து இயங்கி வருவதையும், உட்புறத்தில் வழங்கப்பட்ட தொழிற்நுட்பங்களையும் கலந்தப்படி காட்டுகிறது.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

வீடியோவில் சொனெட் காரை ஓட்டும் நபர் உண்மையில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். காரின் செயல்திறனை காட்டிலும், இரவு நேரத்தில் காட்டின் அழகும், காரின் உட்புற கேபினின் ப்ரீமியம் தரமும் தான் இந்த வீடியோவில் முக்கியமான அம்சங்களாக சுட்டி காட்டப்பட்டுள்ளன.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடல் உட்புறத்தில் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல், ப்ரீமியம் போஸ் சவுண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் மேற்கூரை உள்ளிட்டவற்றை கொண்டிருப்பது இந்த டிவிசி வீடியோவின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகுகிறது.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

வீடியோவில் மரத்துண்டுகள் மற்றும் தேங்கியிருக்கும் நீரில் கார் எளிதாக செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. இது மிக தெளிவாக, புதிய சொனெட் காடுகளில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கும் மிக சரியான வாகனமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

ஹூண்டாய் வென்யூவின் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், பெரும்பான்மையான பாகங்களை வென்யூவில் இருந்து சொனெட் பெற்றுள்ளது. செல்டோஸை போன்று டெக் லைன் & ஜிடி லைன் என இரு விதமான ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எஸ்யூவி காரில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

இதில் ஒன்றான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுவே மற்றொரு என்ஜின் தேர்வான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மூலமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

இவை மட்டுமில்லாமல் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் 100 பிஎச்பி/240 என்எம் மற்றும் 115 பிஎச்பி/250 என்எம் என இரு விதமான ஆற்றல் தேர்வுகளுடன் இந்த புதிய கியா காருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் முதல் தேர்வில் டர்போசார்ஜர் நிலையாகவும், இரண்டாவது தேர்வில் இருக்கும் இடத்தில் இருந்து மாற்றக்கூடியதாகவும் வழங்கப்படும்.

காட்டுவழி பயணங்களுக்கும் சரியான வாகனம் கியா சொனெட்.... உறுதியளிக்கும் கியா மோட்டார்ஸ்...

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் காருக்கான முன்பதிவுகளை ஏற்கனவே ஏற்க துவங்கிவிட்டது. ரூ.25 ஆயிரம் என்ற முன் தொகையுடன் நடைபெற்று வருகின்ற இந்த முன்பதிவுகள் தற்போது வரையில் 6,325 என்ற எண்ணிக்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Kia Sonet TVC Highlights Some Of Its Important Features
Story first published: Sunday, August 23, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X