சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அடுத்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி மாடலான சொனெட்டின் முதல் தொகுப்பு படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

கியா நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்கள் மூலம் காரின் வெளிப்புறம் மட்டுமில்லாமல் உட்புற கேபினின் தோற்றமும் வெளியாகியுள்ளது. இவற்றின்படி பார்க்கும்போது கார் ஸ்போர்டியான தோற்றத்தை மட்டும் கொண்டில்லாமல் பிரிவில் முதல் மாடலாக சில வசதிகளையும் ஏற்றிருக்கும்.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எஸ்யூவி கார் அதன் உலகளாவிய அறிமுகத்தை வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி காணவுள்ளது. இதன் அறிமுகம் குறித்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய டிசைன் பிரிவின் முதன்மை துணை இயக்குனர் கரீம் ஹபிப் கூறுகையில், காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கே உண்டான வலுவான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்துடன் சொனெட் மாடலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

இந்தியா முழுவதும் ஆராய்ந்த பின்னர் எங்களது குழுவினர் இதன் நிறத்தையும் பாகங்களையும் தேர்வு செய்துள்ளனர். இதனால் சொனெட் கார் குறிப்பாக இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என நம்புகிறோம் என கூறினார்.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

இதன் வெளிப்புற தோற்றத்தை பற்றி இதற்கு முன்னர் பலமுறை பேசியுள்ளோம். மீண்டும் ஒரு முறையாக, புலி மூக்கு வடிவிலான க்ரில் அமைப்பை பெற்றுள்ள இந்த சப்-4 மீட்டர் காரில் 3டி ஸ்டெப்வெல் வடிவியலில் க்ரில் மெஷ், ஸ்வாப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், நகர்த்தக்கூடிய ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவற்றை பொருத்தப்பட்டுள்ளன.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

இதன் பின்புறத்தில் எல்இடி டெயில்லைட்கள் எல்இடி ஸ்ட்ரிப் உடன் இணைக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் மையத்தில் மைய கன்சோல் உடன் டேஸ்போர்டு வழங்கப்பட்டிருக்கும். இவை மட்டுமின்றி தற்போது வெளியாகியுள்ள படங்களின் மூலமாக இதன் கேபினில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பிரிவில் முதல் காராக 10.25 இன்ச்சில் எச்டி தொடுத்திரை உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கலாம் என்ற புரிதல் நமக்கு ஏற்படுகிறது.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

இவை மட்டுமின்றி யுவிஒ இணைப்பு சிஸ்டம், கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், வித்தியாசமான ட்ரைவ் & ட்ராக்‌ஷன் நிலைகள், டைமண்ட்-நர்ல்ட் அமைப்பில் செங்குத்தான ஏர் வெண்ட்ஸ், மொபைல் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்காக 2-லேயர் தட்டு போன்றவையும் இதன் கேபினில் வழங்கப்படலாம்.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

பயணிகளின் பாதுகாப்பிற்கு குறைந்தது ஆறு காற்றுப்பைகளை ஆவது கொண்டிருக்கும் என கூறப்படும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் இயக்க ஆற்றலிற்கான என்ஜின் அமைப்பு குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும் ஹூண்டாய் வென்யூவின் ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதன் என்ஜின் தேர்வுகள் அப்படியே சொனெட் மாடலுக்கும் வழங்கப்படலாம்.

சொனெட் எஸ்யூவி காரின் உட்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கியா- ஆகஸ்டில் முன்பதிவு ஆரம்பம்

இந்த வகையில் இந்த காருக்கு கொடுக்கப்படவுள்ள 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 119 பிஎச்பி பவரையும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 99 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த காருக்கு முன்பதிவுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படலாம்.

Most Read Articles

English summary
Kia Motors India releases official images of all-new Kia Sonet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X