புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய கியா சொனெட் எஸ்யூவிக்கு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் கியா சொனெட் கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் சிறப்பான மதிப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இதனால், பண்டிகை காலத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி வாங்க காத்திருப்போர் இந்த புதிய மாடலின் வரவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்தநிலையில், இன்று முதல் புதிய கியா சொனெட் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய கியா சொனெட் காரை ஆன்லைன் மூலமாகவும் அல்லது கியா டீலர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.25,000 முன்பணம் செலுத்தி இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கியா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையில்தான் புதிய கியா சொனெட் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களின் கீழ் பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

விலை உயர்ந்த ஜிடி லைன் வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ணத் தேர்வு, சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள், விசேஷ கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெறும். இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விதத்தில் ரிஃப்லெக்டர் பட்டையும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய கியா சொனெட் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். மேலும், யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது. பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக காரின் பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளையும், தொழில்நுட்ப தகவல்களையும் பெற முடியும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இந்த காரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், வயர்லெஸ் சா்ஜர், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், 7 ஸ்பீக்கர்களுடன் போஸ் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஏர் பியூரிஃபயர், சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய கியா சொனெட் காரில் மூன்று எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வருகிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய கியா சொனெட் கார் ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் விரைவில் வரும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Kia Motor has officially commenced pre-bookings for Sonet SUV in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X