சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது. இந்த நிலையில் முதல் சொனெட் மாதிரி கார் தயாரிப்பு பணிகள் முழுவதையும் நிறைவு செய்து வெளியே வந்துள்ளது.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

ஆந்திர பிரதேசம், அனந்தபூரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள சொனெட்டின் அறிமுகம் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

இதற்கிடையில் இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. கியாவின் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவுள்ள சொனெட், செல்டோஸிற்கு பிறகு இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ள இரண்டாவது மாடலாகும்.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதேநேரம் மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் விற்பனைக்காக சொனெட் கொண்டு செல்லப்படவுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்ட 24 மணிநேரத்தில் 6,523 யூனிட்களை கடந்து ஆச்சிரியப்படுத்தி இருந்த இந்த காம்பெக்ட் எஸ்யூவி, அறிமுகத்திற்கு முன்னதாக இந்திய சந்தையில் முன்பதிவில் புதிய மைல்கல்லை கியா நிறுவனத்திற்கு பெற்று கொடுத்துள்ளது.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

மிகுந்த விற்பனை மோதல் நடைபெற்றுவரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளதால் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை அதிக அளவில் கியா சொனெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்த பிரிவில் நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

இந்த வகையில் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உலகின் முதல் வைரஸில் இருந்து பாதுக்காக்கும் காற்று சுத்திகரிப்பான், போஸ் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் போன்ற மற்ற எந்த காம்பெக்ட் எஸ்யூவி காரும் இந்திய சந்தையில் கொண்டில்லாத வசதிகள் சொனெட்டில் வழங்கப்பட்டுள்ளன.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் இரு பெட்ரோல் மற்றும் இரு டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இதன்படி 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ என்ற இரு பெட்ரோல் என்ஜின்களையும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினையும் இந்த கியா கார் பெறுகிறது.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

இதில் டீசல் என்ஜின் வெவ்வேறு டர்போ தொழிற்நுட்பங்களால் இரு விதமான ஆற்றல் தேர்வுகளுடன் வழங்கப்படும். ட்ரான்ஸ்மிஷனிற்கு 1.0 லி பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 1.0 லி டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு 7-ஸ்பீடு டிசிடி மற்றும் 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் (ஐஎம்டி) என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

சொனெட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவில் துவங்கியது கியா... முதல் மாதிரி கார் வெளியேற்றம்...

டீசல் என்ஜினின் ஒரு ஆற்றல் நிலைக்கு 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும், மற்றொன்றிற்கு 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் கொடுக்கப்படவுள்ளன. சொனெட்டின் தயாரிப்பு பணிகளை கியா துவங்கியுள்ளதால் இந்த காரின் டெலிவிரிகளை இந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
66

English summary
6Kia Sonet First Car Roll Out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X