செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

தொடர் சோதனை ஓட்டமாக கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் மீண்டும் ஒருமுறை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை சற்று பாகங்கள் தெரியும்படி சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டு கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய கார் மற்றும் பைக் மாடல்களை இணையத்தின் மூலமாக அறிமுகம் செய்தும் வெளியிட்டும் வருகின்றன.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

இந்த வகையில் கியா சொனெட் மாடல் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் இருந்து உலகளவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் தான் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த காரின் ப்ரிமியர் வீடியோவிற்கான ஷீட்டிங் ஸ்பாட் படமும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

அதேநேரம் இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களும் கடந்த சில மாதங்களாக கிடைத்த வண்ணம் உள்ளன. ஆனால் அவற்றில் எல்லாம் கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையிலேயே காட்சியளித்தது.

ஆனால் தற்போது பீசே என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சோதனை கார் ஆரஞ்ச் நிற பெயிண்ட் அமைப்பு உடன் காட்சியளிக்கிறது. இந்த ஆரஞ்ச் நிறம் கியா நிறுவனத்தின் முதல் இந்திய அறிமுக மாடலான செல்டோஸ் எஸ்யூவி-விற்கு பரீட்சையமானதாகும்.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

ஏனெனில் இந்த நிறத்தில் தான் செல்டோஸ் காரை அதிகளவில் பொது சாலையில் பார்க்க முடிகிறது. சொனெட்டின் சோதனையில் சற்று மறைப்பு குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த மாடல் தயாரிப்பு பணிகளை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டது என்பதை யூகிக்க முடிகிறது.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

ஆரஞ்ச் நிற பெயிண்ட் அமைப்பை தவிர்த்து தற்போது கண்டறியப்பட்டுள்ள சோதனை சொனெட் காரில் முந்தைய சோதனை கார்களில் இருந்து வேறெந்த மாற்றத்தையும் அறிய முடியவில்லை. முன்னதாக இதன் ஜிடி லைன் வேரியண்ட்டின் உட்புற ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் அறிய முடிந்த தகவல்களையும் நமது தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலின் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த காரில் ஐஎம்டி செமி-ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. வென்யூ மாடலில் இருந்து பெறப்பட்டுள்ள இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக ஓட்டுனர் க்ளட்ச் பெடல் இல்லாமலேயே பாராம்பரியமான மேனுவல் கியர் லிவரை பயன்படுத்த முடியும்.

செல்டோஸ் ரசிகர்களை கவர தயாராகும் கியா சொனெட்... வழக்கமான ஆரஞ்ச் நிறத்தில் சோதனை ஓட்டம்...

இயக்க ஆற்றலுக்கு இதில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் (5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன்), 1.5 லிட்டர் டீசல் (6-ஸ்பீடு மேனுவல்) மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (6-ஸ்பீடு மேனுவல்/7-ஸ்பீடு டிசிடி) என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டில் உடன் மட்டும் தான் ஐஎம்டி கொடுக்கப்படவுள்ளது.

Most Read Articles

English summary
Kia Sonet spied in Seltos Orange colour near factory
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X