நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் செல்டோஸ், கார்னிவல் கார்கள் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களை வசியம் செய்து விட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்பும், சந்தைப் போட்டியும் உள்ள சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புத்தம் புதிய சொனெட் என்ற மாடலை கியா மோட்டார் களமிறக்க உள்ளது.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

கடந்த மாதம் 20ந் தேதி முதல் இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. முதல் நாளில் மட்டும் 6,500க்கும் மேற்பட்டோர் இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளனர்.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

அதிரடியான முன்பதிவு எண்ணிக்கையுடன் துவங்கி இருக்கும் கியா மோட்டார் நிறுவனம், தற்போது இந்த காரின் அறிமுக தேதியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 18ந் தேதி புதிய கியா சொனெட் எஸ்யூவியின் விலை விபரம் அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

கியா சொனெட் எஸ்யூவி டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களில் பல்வேறு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவியில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

இந்த காரின் விலை குறைவான மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

அடுத்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் ஐஎம்டி அல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

மூன்றாவதாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் மாடல்களில் வழங்கப்பட உள்ளது. ஒரு மாடல் 97 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். மற்றொரு மாடலானது 110 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திரனை கொண்டு வர இருக்கிறது. இதில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

புதிய கியா சொனெட் எஸ்யூவியின் விலை உயர்ந்த மாடல்களில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸக்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் அறிமுக தேதி விபரம்!

புதிய கியா சொனெட் எஸ்யூவி ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Kia Motors India have announced the launch date for their much-awaited Sonet SUV in the market. The company has revealed that the Kia Sonet will go on sale in the Indian market from the 18th of September 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X