இன்னும் சில மாதங்களில் புதிய கியா சொனெட் எஸ்யூவி உங்கள் கைகளில் தவழும்... !!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் கால் பதித்தது. அந்நிறுவனம் முதல் மாடலாக களமிறக்கிய செல்டோஸ் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த நிலையில், இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பவி காரை கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது மூன்றாவது மாடலாக சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. செல்டோஸ் எஸ்யூவியைவிட மிக குறைவான பட்ஜெட்டில் வருவதால், இந்த எஸ்யூவி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

கடந்த மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சி தந்த இந்த கியா சொனெட் கார் 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ஹூண்டாய் வெனியூ அடிப்படையில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

ஹூண்டாய் வெனியூ காரின் பல்வேறு முக்கிய பாகங்களை இந்த எஸ்யூவியும் பகிர்ந்து கொள்ளும். அதாவது, ஹூண்டாய் வெனியூ காரின் எஞ்சின் தேர்வுகள்தான் இந்த காரிலும் இடம்பெறும்.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

புதிய கியா சொனெட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனுடன், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 120 பிஎஸ் பவரை அளிக்கும் வல்லமையுடன், எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்படும். கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே டீசல் எஞ்சின் என்றாலும், சக்தியை வெளிப்படுத்தும் திறன் சற்று குறைக்கப்பட்டு வருகிறது.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

இந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் பார், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், உட்புறத்தில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டெட் கார் மொபைல்போன் செயலி, போஸ் சவுண்ட் சிஸ்டம், சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம்!

தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய கியா சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வந்துல்ளது. இந்த கார் ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: ACI

Most Read Articles
English summary
According to the report, KIA Motor is planning to launch the Sonet compact SUV in India by August 2020.
Story first published: Tuesday, March 24, 2020, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X