2020 கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது இந்திய அறிமுக மாடலாக சொனேட் எஸ்யூவியை விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் இந்த எஸ்யூவி கார் தற்சமயம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கார்னிவல் எம்பிவிக்கு அடுத்ததாக மூன்றாவது மாடலாக இந்தியாவில் அறிமுகமாகும் இந்த எஸ்யூவி மாடலானது சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

தற்போது இதன் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், இந்த புதிய எஸ்யூவி மாடல் கதவின் உட்புறத்தில் சில்வர் நிற ட்ரிம் உடன் ட்யூல்-டோனில் கேபினை கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இதேபோல் இந்த 2020 எஸ்யூவி கார், செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட ஏசி, சமமான அடிப்பாகத்தை கொண்ட 3-ஸ்போக் பல செயல்பாடுகள் ஸ்டேரிங் சக்கரம், முன்புற பயணிகளுக்கு நடுவில் ஓய்விற்காக ஆர்ம்ரெஸ்ட், சில்வர் நிறத்தில் உட்புறத்தில் கதவின் ஹேண்டில்கள், சிவப்பு நிற தையலுடன் கருப்பு நிறத்தில் இருக்கைகள் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஹெட்ரெஸ்ட் மற்றும் சீட்பேக் பாக்கெட்களையும் பெற்றுள்ளது.

டேஸ்போர்டில் உள்ள தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை UVO இணைப்பு வசதியுடன் எதிர்பார்க்கலாம். இவை தவிர்த்து இந்த எஸ்யூவி காரின் வெளிப்புறம் மற்றும் இயக்க ஆற்றலுக்கு வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகளை சமீபத்தில் பெங்களூர் சாலையில் நடைபெற்ற சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் ஏற்கனவே விரிவாக கூறியிருந்தோம்.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

அதை மீண்டும் பார்த்தோமேயானால், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல் விளக்குகளை கொண்ட ஹெட்லைட்ஸ், அசத்தலான வடிவில் க்ரில், எல்இடி தரத்தில் டெயில்லைட்ஸ், புதுமையான டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை இந்த எஸ்யூவி கார் வெளிப்புறத்தில் பெற்றுள்ளது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இதன் பெரும்பான்மையாக வெளிப்புற பாகங்கள் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலுடன் ஒத்து காணப்படுகிறது. டிசைன் அமைப்பு மட்டுமின்றி என்ஜின், ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் வென்யூ மாடலில் இருந்து தான் இந்த 2020 எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இதன்படி 2020 கியா சொனேட் மாடல் கார் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக கொடுக்கப்படவுள்ள இந்த என்ஜின் தேர்வுகளில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரையும், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 123 பிஎச்பி பவரையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் திறன் கொண்டவை.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இதன் ஒரே ஒரு டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் என்ஜினுடன் இயங்கவுள்ளது. இந்த என்ஜினை ஏற்கனவே செல்டோஸ் எஸ்யூவி மாடலில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்தியிருந்தது. ஆனால் இந்த என்ஜின் அந்த மாடலில் வெளிப்படுத்தியதை விட சிறிது வித்தியாசப்படும் வகையில் ட்யூன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த மூன்று என்ஜின் தேர்வுகளுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. 1.0 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படவுள்ளது.

கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

சந்தையில் காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த எஸ்யூவியின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவி மாடலுக்கு சந்தையில் விற்பனை போட்டியினை தரும் கார்கள் என்று பார்த்தால், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Video Courtesy: The Car Guide - Rishabh Arora

Most Read Articles
English summary
Kia Sonet SUV interior spy pictures
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X