நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி பற்றிய முக்கிய விபரங்கள்!

வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள கியா சொனெட் எஸ்யூவி குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. முதல் மாடலாக அந்நிறுவனம் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, கார்னிவல் எம்பிவி காரையும் களமிறக்கியது. சொகுசு கார்களுக்கே கார்னிவல் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

இந்த நிலையில், மூன்றாவது மாடல்தான் வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான மார்க்கெட்டை குறிவைத்து அந்நிறுவனம் சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. வரும் பண்டிகை கால வரவாக இடம்பெற்றிருக்கும் கியா சொனெட் வடிவமைப்பு, வசதிகளிலும் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

இந்த நிலையில், கியா சொனெட் எஸ்யூவி முறைப்படி நேற்று கியா மோட்டார் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், வரும் ஆகஸ்ட் 7ந் தேதி சொனெட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

கியா சொனெட் எஸ்யூவியை பிரபலப்படுத்தவும், எஸ்யூவி வாங்க இருப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து டீசர்களையும் வெளியிட்டு வருகிறது கியா மோட்டார். வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள கியா சொனெட் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

செல்டோஸ் எஸ்யூவியின் மினியேச்சர் மாடலாக கருதப்படுவதால், இந்த எஸ்யூவியின் டிசைன் மிகச் சிறப்பாக இருக்கும் என்று இந்தியர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி லைட் பார், எல்இடி ஸ்பிளிட் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றிருப்பது டீசர் மூலமாக தெரிய வருகிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

ரூஃப் ரெயில்கள், ரூஃப் ஸ்பாய்லர், ரியர் விண்ட்ஷீல்டு வைப்பர் உள்ளிட்டவையும் டீசர் மூலமாக பார்க்க முடிகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம், போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அடிப்படையிலான மாடல்தான் கியா சொனெட் எஸ்யூவி. எனவே, இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வர இருக்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா சொனெட் பற்றிய முக்கிய விபரங்கள்!

செல்டோஸ், கார்னிவல் வரிசையில் சொனெட் எஸ்யூவியும் மிகப்பெரிய வரவேற்பை இந்தியாவில் பெறும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. மேலும், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தையும் இந்த எஸ்யூவி ஈர்த்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு கடும் போட்டியை தரும்.

Most Read Articles
English summary
The South Korean automaker has announced its third product the Sonet will be globally premiered on August 7, 2020. Ahead of launch the company has released a new teaser, which reveals a production-ready model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X