சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது இந்திய அறிமுக மாடலான சொனெட் எஸ்யூவியின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெரியவந்துள்ள காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

செல்டோஸ் மாடலின் வெற்றியை தொடர்ந்து காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிலும் அதே அளவிலான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெற கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல் உலகளாவிய அறிமுகத்தை காணவுள்ளது.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

இந்த நிலையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் வகையில் புதிய டீசர் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் வென்யூ மாடலின் அதே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கியாவின் இந்த மாடல் பெரும்பான்மையான வன்பொருள்களை அந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் இருந்து தான் பகிர்ந்து கொண்டுள்ளது.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சொனெட் காரில் நேர்த்தியான முன்புற க்ரில், முன்புற பம்பர், எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், கருப்பு நிறத்தில் பில்லர்கள் மற்றும் கவர்ச்சிக்கரமான டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தன.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், கேபினை சுற்றிலும் விளக்குகள், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், சாஃப்ட் லெதரில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

இந்த தொழிற்நுட்ப அம்சங்களுடன் என்ஜின் தேர்வுகளையும் கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ மாடலில் இருந்து தான் பெறவுள்ளது. இதன்படி கியாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் மூன்று என்ஜின் தேர்வுகளை ஏற்கவுள்ளது. இதில் ஒன்றான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி/114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. மற்ற இரு என்ஜின் தேர்வுகளான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும் வழங்கப்படவுள்ளது. வென்யூ டர்போ பெட்ரோல் வேரியண்ட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இண்டலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டத்தை சொனெட்டின் டர்போ வேரியண்ட்டும் பெறவுள்ளது.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

செல்டோஸ் எஸ்யூவி காரில் இருந்து யுவிஒ இணைப்பு தொகுப்பை ஏற்கவுள்ள இந்த கியா காம்பெக்ட் எஸ்யூவி கார், இந்த தொகுப்பினால் பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன மேனேஜ்மெண்ட், கூடுதல் சவுகரியம், ரிமோட் ஆக்ஸஸ் மற்றும் நாவிகேஷனை பெறவுள்ளது. இதில் சில தொழிற்நுட்பங்களை வாய்ஸ் கமெண்ட்டின் மூலமாக கண்ட்ச்ரோல் செய்ய முடியும்.

சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டது கியா...

கியா சொனெட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7-11 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது இந்த பிரிவில் உள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மற்ற காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு சரியான போட்டியினை அளிக்கும்.

Most Read Articles

English summary
kia sonet new teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X