Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன நடந்தாலும் இந்த கார் உங்களை காப்பாற்றிவிடும்... இதற்கான சான்றே இந்த வீடியோ! பாத்தீங்கனா மெர்சலாயிடுவீங்க!
கியா நிறுவனத்தின் சொரென்டோ காரின் பாதுகாப்புகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஐரோப்பியாவின் என்சிஏபி அமைப்பு நடத்திய விபத்து பரிசோதனையில் கியா நிறுவனத்தின் சொரென்டோ எஸ்யூவி கார் ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரேட்டிங் சொரென்டோ மாடலில் கிடைக்கும் அனைத்து 2020 வேரியண்டுகளுக்குமே பொருந்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், சொரென்டோ கார்களைப் பயன்படுத்தும் அனைத்து ஐரோப்பியர்களுக்கும் பாதுகாப்பான பயணம் உறுதியாகியுள்ளது. ஏனெனில், தற்போது மோதல் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டது ஐரோப்பியாவிற்கான ஸ்பெக் மாடலாகும். இது பிளக்-இன் ஹைபிரிட் வேரியண்ட் ஆகும். சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என காரில் பயணிக்கும் அனைவருக்கும் இக்கார் அமோகமான பாதுகாப்பை வழங்கும் கார் என்கிற நற்சான்றைப் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக, பெரியவர்களின் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 31.2 புள்ளிகளை இக்கார் பெற்றிருக்கின்றது. இதேபோன்று சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 41.9 புள்ளிகளை சொரென்டோ பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பாதசாரிகளின் பாதுகாப்பிலும் இக்கார் நல்ல ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றது. இதில், 34.1 சதவீதத்தை சொரென்டோ கார் பெற்றிருக்கின்றது.

கியா சொரென்டோ காரில் பல்வேறு விதமான பாதுகாப்பு கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவையே இக்கார் மோதல் பரிசோதனையில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற உதவியாக இருந்திருக்கின்றது. மோதலைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், வேகத்தை எச்சரிக்கும் அம்சம், உயர் பாதுகாப்பு திறன் கொண்ட கட்டுமானம் உள்ளிட்ட அம்சங்கள் சொரென்டோவில் இடம் பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமின்றி ஏழு ஏர் பேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், லேன் சப்போர்ட் மற்றும் ஏஇபி உள்ளிட்ட உயர் பாதுகாப்பு வசதிகளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றினாலேயே பாதுகாப்பான பயணத்திற்கான உகந்த காராக இது மாறியிருக்கின்றது. இதுமட்டுமின்றி வேரியண்ட் வாரியாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கியா, சொரென்டோ கார்களில் வழங்கி வருகின்றது.

சொரென்டோவின் ஹைபிரிட் வெர்ஷனையே யூரோப் என்சிஏபி கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இது 1.6 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஹைபிரிட் என்பதால் பெட்ரோல் எஞ்ஜினுடன் அனைத்து வீல்களையும் இயக்கக்கூடிய மின் மோட்டாரும் இதில் இடம்பெற்றிருக்கும். இதுமட்டுமின்றி 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் இக்கார் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கியா நிறுவனம் தற்போது செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. செல்டோஸ் அடிப்படையிலான சொரென்டோவை அது களமிறக்குவதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், அதிக பாதுகாப்பு திறன் கொண்ட சொரென்டோ அறிமுகம் சந்தேகத்திற்குரியதே. அதேசமயம், இதன் இடத்தை பூர்த்தி செய்யும் வகையிலேயே செல்டோஸ் எஸ்யூவி கார் நாட்டில் விற்பனையில் இருக்கின்றது.