சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சொரெண்டோ ஹைப்ரீட் மாடலின் தயாரிப்பை துவங்கியுள்ளது. இந்த வகையில் முதன்முறையாக எலக்ட்ரிக் ஆற்றலின் மூலமாக இயங்கவுள்ள கியாவின் இந்த தனித்துவமான எஸ்யூவி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

சொரெண்டோவின் நான்காம் தலைமுறை காராக வெளிவரவுள்ள இதன் தயாரிப்பு பணிகள் தென் கொரியாவில் உள்ள கியாவின் ஹுவாஸ்வாங் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த ஹைப்ரீட் மாடல்கள் மட்டுமின்றி இந்த எஸ்யூவி காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

முதலாவதாக உருவாக்கப்படும் சொரெண்டோ ஹைப்ரீட் மாடல்கள் ஐரோப்பிய சந்தைக்கான டிசைனில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தென் கொரியாவை தொடர்ந்து விரைவில் அமெரிக்கா, ஜியார்ஜியா பகுதியில் உள்ள தனது தொழிற்சாலையிலும் இந்த ஹைப்ரீட் கார்களின் தயாரிப்பை கியா நிறுவனம் துவங்கவுள்ளது.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

இதே தயாரிப்பு லைன்னில் உருவாக்கப்பட்டு வரும் சொரெண்டோ மாடலின் மூன்றாம் தலைமுறை கார் தோற்றத்தில் சில பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனால் இதே தயாரிப்பு நிலைப்பாட்டையும், தரமான கண்ட்ரோல்களையும் தான் புதிய ஹைப்ரீட் மாடலும் கொண்டிருக்கும்.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

சொரெண்டோ, கிட்டத்தட்ட 18 வருடங்களாக கியாவின் சர்வதேச லைன்-அப்பில் இருந்து வருகிறது. இதுவரை மொத்தம் 3 மில்லியன் மாதிரிகள் விற்பனையாகியுள்ள சொரெண்டோவின் முதல் தலைமுறை கார் கடந்த 2002ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

ஐரோப்பிய சந்தைக்கு தற்போது தயாரிப்பில் உள்ள நான்காம் தலைமுறை சொரெண்டோ மாடல் 2020ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து இந்த வருட இறுதிக்குள்ளாக கியாவின் மற்ற முக்கியமான வெளிநாடுகளின் சந்தைகளுக்கும் சென்றுவிடும்.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

சில நாடுகளில் முதன்முறையாக ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டின் மூலமாக கியா சொரெண்டோ எஸ்யூவி கார் நுழையவுள்ளது. கியாவின் புதிய தலைமுறை மிட்சைஸ் எஸ்யூவி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ள முதல் வாகனமாக விளங்கவுள்ள புதிய சொரெண்டோ மாடல் பெரிய பாடி பேனல்களுடன் அதிகளவில் பொருட்களை ஏற்றி செல்லும் வகையில் இருக்கும்.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

மேலும் இந்த ப்ளாட்ஃபாரம் மூன்று-வரிசை இருக்கை அமைப்பையும் உறுதி செய்கிறது. சொரெண்டோ ஹைப்ரீட் காரில் வழங்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட்ஸ்ட்ரீம் எலக்ட்ரிக் பவர்ட்ரெயினில் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் ஆனது 1.49 kWh லித்தியம்-இரும்பு பாலிமர் பேட்டரி தொகுப்பு மற்றும் 44.2 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும்.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

கியாவின் புதிய ப்ளாட்ஃபாரத்தினால் உட்புற கேபினின் வெற்றிடங்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த பேட்டரி தொகுப்பு காரின் அடிப்பகுதியில் பொருத்தப்படுகிறது. குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடை அதிக செயல்திறன் உடன் வெளிப்படுத்தும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக அதிகப்பட்சமாக 230 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...

இதன் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆனது என்ஜினின் ஆற்றலில் எந்த இழப்பும் ஏற்பட அனுமதிக்காத எலக்ட்ரிக் கருவிகளுடன் இணைக்கப்படுகிறது. இதன் விளைவாக எந்த வேகத்திலும் ஆக்ஸலேரஷனை உடனடியாக கொடுக்க முடியும்.

Most Read Articles

English summary
Kia Sorento Hybrid SUV production begins, first models roll off Korean facility
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X