Just In
- 11 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தரமான சம்பவம்... மற்ற மாநிலங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த மம்தா அரசு... என்னனு தெரியுமா?
மற்ற மாநிலங்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில், கொரோனா பிரச்னைக்கு மத்தியிலும், அருமையான நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுத்து வருகிறது.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிகப்படியான தொகை செலவிடப்படுவதால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் மின்சார வாகனங்கள் ஒரே மற்றும் நல்ல தீர்வாக பார்க்கப்படுகின்றன.

இதன் காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநில அரசுகளை பொறுத்தவரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்து வருகின்றன.

மேற்கு வங்க மாநில அரசை பொறுத்தவரை, மின்சார துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக தற்போது 5 மின்சார கார்களை வாங்கியுள்ளது. இஇஎஸ்எல் நிறுவனத்திடம் இருந்து, 5 ஆண்டுகள் குத்தகைக்கு இந்த 5 மின்சார கார்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்சார வாகனங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், 50 புதிய மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மின்சார பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

குளிர் சாதன வசதியுடன் கூடிய 50 புதிய மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் முடிவை மேற்கு வங்க போக்குவரத்து கழகம் கடந்த செவ்வாய் கிழமையன்று இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. இந்த 50 புதிய மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்தால், கொல்கத்தா நகரில் இயங்கும் மொத்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை 130ஆக உயரும்.

தற்போதைய நிலையில் மேற்கு வங்க போக்குவரத்து கழகம் 80 மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது. அவை சிறப்பாக இயங்கி வருவதன் காரணமாக, மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு பாராட்டுக்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை இன்னும் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

டீசலில் இயங்கும் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்துடன் கொல்கத்தா நகரின் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதில் இந்த மின்சார பேருந்துகள் முக்கிய பங்காற்றும்.

இதுபோன்ற காரணங்களால், மற்ற மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்களின் கவனமும் மின்சார பேருந்துகளின் மீது திரும்பி வருகிறது. ஆனால் தற்போது கொரோனா பிரச்னை கோர தாண்டவம் ஆடி வருவதால், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு மின்சார தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக மின்சார இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் அறிமுகமாகி வருகின்றன.

மின்சார கார்களை பொறுத்தவரை தற்போதைய நிலையில், டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், வரும் காலங்களில் மின்சார கார்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.