கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களுக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்ற வேலையில் கேரள மாநிலத்தில் விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

உலகம் முழுவதிலம் மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்ட வருகின்றது. இந்தியாவிலும் மக்களை மின் வாகன பயன்பாட்டின் ஈர்க்கும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, ஒரு சில மாநிலங்கள் சிறப்பு மானியம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றன.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

இம்மாதிரியான சூழ்நிலையில் குறிப்பிட்ட நகரத்தில் மின்சார வாகனங்களை இயக்குவதற்கு தடை ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலேயே இந்த முரண்பாடான நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களே இந்த சிக்கலில் சிக்கியிருக்கின்றன.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 167 இ-ஆட்டோரிக்ஷாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 63 வாகனங்கள் ஆட்டோக்கள் மாவட்டத்தின் கார்பரேஷன் எல்லைக்குள் இயங்குகின்றன. இவர்களுக்கான ஆட்டோ ஸ்டாண்ட் ஒதுக்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல முறை ஆட்டோ ஸ்டாண்டிற்கான கோரிக்கையை முன் வைத்தும் அது நிராகரிக்கப்பட்டிருப்பதாக மாத்ருபூமி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

இதுதவிர, வழக்கமான ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் சிலர் பொது இடங்களில் இ-ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தால், அங்கு ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என விரட்டுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால், அறிவிக்கப்படாத தடையை தாங்கள் சந்தித்து வருவதாக கோழிக்கோடு பகுதியில் இருக்கும் மின்சார ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

ஒரு பக்கம் அரசு சார்பில் பழைய ஆட்டோக்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுபக்கம் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தடைகள் மின்சார ஆட்டோ ஓட்டுநர்களை ஒதுக்கி வைக்கின்றன. இதனால் அனைத்து தரப்பிலும் அவர்கள் இன்னல்களைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

குறிப்பாக, கோழிக்கோடு பகுதியில் சவாரி செய்ய முடியாமல் அவர்களின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த பிரச்னை கடந்த சில மாதங்களாகவே நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கேரள மாநிலத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்திருப்பதால், தேர்தல் முடிவிற்கு பின்னரே சுமூகமான தீர்வு எட்டப்படும் என தெரிகின்றது.

கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!

"தற்போது கோழிக்கோடு நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் ஆட்டோக்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவற்றில் தற்போது 400 ஆட்டோக்கள் நிறுத்துவதற்கே ஸ்டாண்ட்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் புதிய ஆட்டோக்கள் சேருமானால் ஏற்கனவே இருக்கும் ஆட்டோக்கள் வெளியேறும் நிலை உருவாகும். இதனால், அவர்களும் பாதிக்கப்படுவார்கள்" என நகரத்தின் ஆட்டோரிக்ஷா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கின்றார்.

குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Kozhikode Electric Auto Rickshaw Drivers Face UnOfficial Ban In City. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X