லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான லம்போர்கினி, ஹூராகென் மாடலின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய லம்போர்கினி ஹூராகென் எவொ மாடலை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

லம்போர்கினி நிறுவனம் ஹூராகென் எவொ காரை சர்வதேச சந்தையில் ஏற்கனவே பின்சக்கர ட்ரைவ், ஆல் வீல் ட்ரைவ் மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட வெர்சன்களில் விற்பனை செய்து வருகிறது. இதில் தற்போது புதியதாக பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் இணைந்துள்ளது.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

ஹூராகென் எவோவின் இந்த புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சனின் சிறப்பம்சமாக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றக்கூடிய ரூஃப் மற்றும் பின் சக்கரங்களின் மூலமாக இயங்கும் திறன் உள்ளிட்டவை உள்ளன.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

மற்றப்படி இந்த புதிய வெர்சனில் ஹூராகென் எவோ மாடலின் அனைத்து டிசைன் மற்றும் என்ஜின் அமைப்புகளும் அப்படியே தொடர்ந்துள்ளது. ஹூராகென் எவோவில் லம்போர்கினி நிறுவனம் 5.2 லிட்டர் வி10 என்ஜினை ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தி வருகிறது.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

இந்த புதிய வெர்சனில் மற்ற சில வெர்சன்களை போல் ஆற்றலை பின்சக்கரத்திற்கு வழங்கவுள்ள இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 610 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் பெற முடியும்.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

அதிகப்பட்ச வேகமான 324kmph என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் அடைந்துவிடும் இந்த கார் கூபே வடிவில் 323kmph என்ற வேகத்தில் தான் அதிகப்பட்சமாக செல்லும். அதேபோல் இந்த வடிவில் இந்த அதிகப்பட்ச வேகத்தை அடைய கூடுதலாக 0.2 வினாடிகளை எடுத்துக்கொள்ளும்.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

அதேபோல் என்ஜின் வழங்கக்கூடிய ஆற்றலிலும் இந்த கூபே மோடில் சிறிய குறைப்பு ஏற்படுகிறது. புதிய எவொ பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் ரூஃப்-ஐ எலக்ட்ரிக் மூலமாக வெறும் 17 வினாடிகளில் 50kmph என்ற வேகத்தில் செயல்படுத்தும். ரூஃப்-ன் டிசைன் காரின் பெயிண்ட் அமைப்பை பொறுத்து மாறுப்படும். இதன் 19 இன்ச் சக்கரங்கள், பைரெல்லி பி ஜீரோஸ் டயர்களுடன் வழங்கப்படுகிறது.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

இதுமட்டுமின்றி உரிமையாளர் 20 இன்ச் சக்கரங்கள் மற்றும் கார்பன் பீங்கான் ப்ரேகுகளையும் கூடுதல் தேர்வாக பெறலாம். இந்த பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் போன்ற எடை குறைவான உலோகத்தால் சேசிஸ் மற்றும் ரூஃப் தயாரிக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

இதன் எடை 1509 கிலோ ஆகும். இருப்பினும் இந்த எடை ஹூராகென் எவோ காரின் மற்ற வெர்சன்களை காட்டிலும் 88 கிலோ அதிகமாக உள்ளது. உட்புறத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், ஹூராகென் எவொவின் வழக்கமான லேஅவுட்டை அப்படியே கொண்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

இந்த வகையில் இதன் உட்புற கேபின் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8.4 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழுவதும் டிஜிட்டலில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகென் எவொ காரின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சன் அறிமுகம்...!

லம்போர்கினி விரைவில் ஹூராகென் எவொ மாடலின் புதிய பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஹூராகென் எவோ மாடலை இந்நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ.3.22 கோடியில் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Lamborghini Huracan EVO Rear-Wheel Drive Spyder Global Launch
Story first published: Thursday, May 7, 2020, 23:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X