புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

ஹூராகென் எவோ மாடலின் பின்-சக்கர-ட்ரைவ் வெர்சன் இந்தியாவில் வருகிற 29ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக லம்போர்கினி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஹூராகென் எவோ மாடலை இந்நிறுவனம் சமீபத்தில் தான் உலக சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

இதனால் இந்த புதிய லம்போர்கினி கார் இந்திய சாலையில் விரைவில் காட்சியளிக்கவுள்ளது. ஆனால் ஆல்-வீல்-ட்ரைவ் மாடலுடன் ஒப்பிடும்போது இந்த மாத இறுதியில் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ள ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சன் கார் சில வெளிப்புற டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கும்.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

மேம்படுத்தப்பட்ட ஏரோடைனாமிக் சிஸ்டத்தை கொண்டிருக்கும் இந்த புதிய வெர்சன் ஹூராகென் எவோ கார், மிக பெரிய முன்புற ஏர் இண்டேக் அமைப்புடன் புதிய முன்பக்க ஸ்ப்லிட்டர் மற்றும் செங்குத்தான ஃபின்களினால் கூடுதலான எரிபொருள் திறனை பெற்றுள்ளது. ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனுக்கு ஏற்ற நேர்த்தியான வடிவில் புதிய எக்ஸாஸ்ட் அமைப்பும் இந்த சூப்பர் காரில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

உட்புறத்தில் ஹூராகென் மாடலின் இந்த ரியர்-வில்-ட்ரைவ் வெர்சன், ஸ்மார்ட்போன் இணைப்பு, இணையத்தள அனுமதி உள்ளிட்ட கண்ட்ரோல்களை கொண்ட, ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய 8.4 இன்ச் தொடுத்திரையை கொண்டுள்ளது. மேலும் காரின் உட்புறத்தை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொடுக்கக்கூடிய பணியையும் லம்போர்கினி நிறுவனம் ஏற்கவுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

ஹீராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனில் வழக்கமான 5.2 லிட்டர் வி10 என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு, ஆல்-வீல்-ட்ரைவ் வெர்சனை விட 30 பிஎச்பி குறைவாக 609 பிஎச்பி ஆகவும், 40 என்எம் குறைவாக 560 என்எம் டார்க் திறனாக உள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

அதேபோல் இந்த புதிய வெர்சன் காரின் எடையும் ஆல்-வீல்-ட்ரைவ் மாடலை விட 33 கிலோ குறைவாக உள்ளது. இருப்பினும் இந்த புதிய வெர்சன் 0-விலிருந்து 100 km/h வேகத்தை தற்போதைய வெர்சனை விட 0.4 வினாடி தாமதமாக (மொத்தம் 3.3 வினாடிகளில்) எட்டுகிறது. இந்த ரியர்-வீல்-ட்ரைவ் மாடலின் அதிகப்பட்ச வேகம் 325 km/h ஆகும்.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

காருக்கு என்ஜின் வழங்கும் ஆற்றலை கணக்கிடுவதற்காக பர்ஃபார்மன்ஸ் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த அமைப்பு காரை சில ஸ்லிப்களுக்கு உள்ளாக்க தான் செய்கிறது. ட்ராக்‌ஷன் கண்ட்ரோலுடன் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், காற்றுப்பைகள், இபிடி, இபிஎஸ் உள்பட பல தொழிற்நுட்பங்கள் இந்த சூப்பர் காரில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

லம்போர்கினி ஹூராகென் எவொ மாடலின் தற்போதைய ஆல்-வீல்-ட்ரைவ் வெர்சனின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.3.73 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இம்மாடலின் ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனை குறைவான விலையில் விற்பனை செய்ய லம்போர்கினி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

அதாவது இந்த புதிய ஹூராகென் எவோ காரின் விலை ரூ.2.90 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் மாடலின் விலை மிகவும் அதிகமாக ரூ.4.1 கோடியாக எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...

நேரான வழியில் பயணிக்காமல் சாலையின் கார்னர்களில் காரை இயக்க விரும்புபவர்களுக்கு லம்போர்கினி ஹூராகென் எவோவின் இந்த ரியர்-வீல்-ட்ரைவ் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமின்றி ஆல்-வீல்-ட்ரைவ் மாடலை விட குறைவான எடையில் இந்த புதிய வேரியண்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிறந்த லேப் நேரத்தை நிச்சயம் பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
Lamborghini Huracan EVO RWD India Launch Date Confirmed For 29th Of January
Story first published: Friday, January 17, 2020, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X