சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டேடோனா பீச்சில், டேடோனா சர்வதேச ஸ்பீடுவே அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், 24 ஹவர்ஸ் ஆஃப் டேடோனா (24 Hours of Daytona) ஸ்போர்ட்ஸ் கார் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. மோட்டார்ஸ்போர்ட் ரேஸிங்கில் இது எண்டூரன்ஸ் ரேஸிங் (Endurance Racing) வகையை சேர்ந்தது.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

அதாவது உபகரணங்களின் ஆயுள் மற்றும் போட்டியாளர்களின் சகிப்புத்தன்மை ஆகியவை இதில் பரிசோதிக்கப்படும். இந்த 24 ஹவர்ஸ் ஆஃப் டேடோனோ பந்தயத்தில் 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய பிறகு, ரோடு-லீகல் வெர்ஷனை அறிமுகம் செய்வதன் மூலம், தனது ஹூராகேன் ஜிடி3 (Huracan GT3) பந்தய காருக்கு மரியாதை செலுத்த லம்போர்கினி நிறுவனம் முடிவு செய்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

ரோடு-லீகல் வெர்ஷன் என்பது பொது சாலைகளிலும் பயன்படுத்துவதற்கான அனுமதி மற்றும் உபகரணங்களை பெற்ற வாகனம் ஆகும். இதன்படி லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ (Lamborghini Huracan STO) நேற்று (நவம்பர் 18) உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டது. இதில், எஸ்டிஓ என்பது Super Trofeo Omologata என்பதை குறிக்கிறது.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

பந்தய காரின் வழித்தோன்றலாக இருப்பதால், லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ காரின் 75 சதவீத பாடி, கார்பன்-ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சூப்பர் காரில், எடை குறைவான டைட்டானியம் ரோல்-பார்கள், 4-பாயிண்ட் சீட் பெல்ட்டுடன் கார்பன்-ஃபைபர் பக்கெட் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ காரின் ஒட்டுமொத்த எடையை குறைப்பதற்கு இவை உதவியுள்ளன. லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ காரில், 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 565 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9 வினாடிகளில் எட்டி விடும் திறனை இந்த கார் பெற்றுள்ளது.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

அதே நேரத்தில் ஹூராகேன் எஸ்டிஓ கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் எவ்வளவு கார்கள் உற்பத்தி செய்யப்படும்? மற்றும் விலை எவ்வளவு? போன்ற விபரங்கள் எதையும் லம்போர்கினி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

சாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு!

எனினும் செயல்திறன் மற்றும் பாரம்பரியம் போன்ற விஷயங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அதிர்ஷ்டம் உள்ள ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ கார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Lamborghini Huracan STO Globally Unveiled. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X