லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இந்தியாவில் ரூ. 8 கோடி மதிப்பில் விற்பனையாகும் லம்போர்கினி உருஸ் காரைப் பற்றிய குறிப்பிட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நிச்சயம் உங்களை மிரள மற்றும் உறைய வைக்கலாம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இந்தியாவில் சமீப காலமாக சொகுசு மற்றும் விலையுயர்ந்த வாகனங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு அந்த வாகனங்களில் கிடைக்கும் அளவிட முடியாத லக்சூரி வசதிகளே முக்கிய காரணம். அந்தவகையில், உலக புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இதை வெளிப்படுத்தும் வகையில் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக லம்போர்கினி உருஸ் உருமாறியுள்ளது. இந்தியாவில் இந்த கார் சுமார் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் அமோகமான வரவேற்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

அந்தவகையில், இந்தியாவிலும் இந்த காருக்கு கடந்த வருடத்தில் இருந்து நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது. இதுமாதிரியான வரவேற்பை இந்தியாவில் பெறும் லம்போர்கினி நிறுவனத்தின் முதல் கார் இதுவேவாகும். குறிப்பாக, இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் பலரை இந்த கார் அதிகளவில் கவர்ந்து வருக்கின்றது.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

அதாவது, அம்பானி போன்ற முன்னணி பணக்காரர்களிடத்தில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, நாட்டின் பல முன்னணி திரை நட்சத்திரங்களும் இந்த விலையுயர்ந்த காரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி என்னதான் இந்த காரில் இருக்கிறது?... ஏன் பணக்காரர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் இந்த கார் பிரபலமாக இருக்கின்றது?... என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

அதைவிட மிக முக்கியமாக இந்த கார் எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற கேள்வியும் நம்மில் பலருக்கு எழுந்திருக்கும். இதை பற்றிதான் இந்த பதிவில் மிக விரிவாக நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

கர்நாடகாவைச் சேர்ந்த லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் உரிமையாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோவின்படி இந்த தகவலை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இவர், கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டிலேயே இந்த காரை வாங்கியிருக்கின்றார். இதைத்தொடர்ந்தே, அக்காரை பரீட்சை செய்யும் விதமாக சமீபத்தில் பயன்படுத்தியிருந்தார். அதாவது, கொரோனவிற்கு முந்தைய காலத்தில் இதனை மேற்கொண்டுள்ளார். ஆனால், இப்போதுதான் அந்த வீடியோவை "கேட்ச் ஏ மைல்" என்னும் யுடியூப் சேனல் வாயிலாக அவர் வெளியிட்டுள்ளார்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

காரின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஆய்வும் செய்யும் விதமாகவே இந்த விநோத பரீட்சையை அவர் செய்திருக்கின்றார்.. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலமே உலக புகழ்பெற்ற லம்போர்கினி உருஸ் கார் என்ன மைலேஜ் கொடுக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இந்த தகவல் பலருக்கு ஷாக் அளிக்கும் வகையில் இருக்கலாம். ஆம், பல கோடி ரூபாய் மதிப்பில் செலவு செய்து வாங்கப்படும் லம்போர்கினி உருஸ் இவ்வளவு குறைந்த மைலேஜை வழங்கினால் யாருக்குதான் ஷாக்காக இருக்காது. ஆனால், இதனைத் தெரிந்தேதான் உலக கோடீஸ்வரர்கள் இந்த காரை வாங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

ஆம், லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் லிட்டர் ஒன்றிற்கு கோர்சா மோடில் 1.3 கிமீ முதல் 1.8 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்குகிறதாம். நாம் படிப்பது சரியான எண்கள்தானா என்ற கேள்வியும் இப்போது உங்களுக்கு எழும்பியிருக்கலாம். நூறு சதவீதம் அது சரியானதுதான்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

லம்போர்கினி உருஸ் காரில் வழங்கப்பட்டிருக்கும் ரைடிங் மோட்களில் ஒன்றான கோர்சா மோடில் இயக்கியபோதே இந்த குறைந்தளவு மைலேஜை அது வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, லிட்டர் ஒன்றிற்கு 1.3 கிமீ முதல் 1.8 கிமீ மைலேஜை மட்டுமே வழங்கியுள்ளது. நாங்கள் கூறுவதை நம்பவில்லை என்றால் வீடியோவில், லம்போர்கினி உருஸ் காரின் உரிமையாளரே கூறியிருப்பதைக் கேளுங்கள். வீடியோ கீழே உள்ளது.

இந்த வீடியோவில் முதலில் காரின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் அனைத்து பகுதிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, காரின் கேபின் மற்றும் அதில் செய்யப்பட்டிருக்கும் கஸ்டமைசேஷன் உள்ளிட்டவை காண்பிக்கப்படுகின்றது. இவ்வாறு பல கோணங்களில் காரை காண்பித்த பின்னரே, உருஸ் எஸ்யூவி காரை எடுத்துக் கொண்டு அதன் உரிமையாளர் பெங்களூருவை வலம் வர ஆரம்பிக்கிறார்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இந்த ரைடிங் அனுபவத்தின் மூலமே உருஸ் எஸ்யூவி மைலேஜ் பற்றிய ஷாக் விவரம் தெரியவந்துள்ளது. இந்த குறைந்தளவு மைலேஜிற்கு காரின் அதிவேக ஓடும் திறனே முக்கிய காரணமாக இருக்கிறது. வழக்கமாக இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 2.4 கிமீ மைலேஜை தரும் என அந்த இளைஞர் தெரிவித்தார். ஆனால், தற்போது கோர்ஷா மோடில் வைத்து இயக்கிய காரணத்தினாலயே இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான மைலேஜை அது வழங்கியிருப்பதாக விளக்கினார்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

இதுமட்டுமின்றி, காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் லேசான ட்யூனிங்கையும் அவர் செய்திருக்கின்றார். இதுபோன்ற குறிப்பிட்ட காரணங்களாலும் இந்த காரின் மைலேஜ் சற்று குறைந்திருக்கின்றது.

லம்போர்கினி உருஸ் அதிதிறனுடைய காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

லம்போர்கினி உருஸ் பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயம் அதை கனவில்கூட நினைக்க மாட்டீங்க... வீடியோ!

அதாவது, இந்த உச்சபட்ச திறனைக் கொண்டு வெறும் 3.6 நொடுகளில் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை தொட்டுவிட முடியும். இதேபோன்று அதிகபட்சமாக மணிக்கு 305 கிமீ என்ற வேகத்தில் லம்போர்கினி உருஸ் காரில் நம்மால் பயணிக்க முடியும். ஆனால், இத்தகைய வேகத்திற்கு இந்தியாவில் தற்போது வரை தடைவிதிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
Lamborghini Urus Mileage Details Revealed By Karnataka Youngster. Read In Tamil.
Story first published: Thursday, May 21, 2020, 19:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X