லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

பெரும் ஆவலை ஏற்படுத்திய புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

உலக அளவில் ஆஃப்ரோடு சொகுசு எஸ்யூவி பிரியர்களின் கனவு எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக லேண்ட்ரோவர் டிஃபென்டர் இருந்து வருகிறது. இந்த நிலையில், மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி முதல்முறையாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

இது இந்திய சொகுசு கார் பிரியர்கள் மற்றும் ஆஃப்ரோடு சொகுசு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வாரம் ஆகும் நிலையில், இந்த எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் துவங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

ஹைதராபாத்தில் உள்ள லேண்ட்ரோவர் ஷோரூமில் டிஃபென்டர் எஸ்யூவி டெலிவிரி கொடுக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வண்ண டிஃபென்டர் எஸ்யூவி வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டதாகவும் அந்த பதிவு தெரிவிக்கிறது.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

இதன்மூலமாக, இந்தியாவில் டிஃபென்டர் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் முறைப்படி துவங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி இரண்டு மாடல்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. டி90 மற்றும் டி110 என இரண்டு வீல் பேஸ் நீளம் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

டிஃபென்டர் டி110 என்ற அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டி90 மாடலின் டெலிவிரி பணிகள் பின்னர் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

டிஃபென்டர் எஸ்யூவியில் சொகுசு அம்சங்களும், ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களும் சேர்ந்து கொடுக்கப்படுகின்றன. ஆஃப்ரோடு டயர்கள், மேடு பள்ளங்களில் எளிதாக ஏறி இறங்குவதற்கான வடிவமைப்பு, அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு, 900 மிமீ ஆழம் வரையிலான நீர் நிலைகளை கடக்கும் வசதி, பல்வேறு நிலப்பரப்புகளுக்கு தக்கவாறு மாற்றிக்கொள்வதற்கான டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் -2 தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

இந்த எஸ்யூவியில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதி, நேவிகேஷன் வசதி ஆகியவை உள்ளன.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. லாக்கிங் டிஃபரன்ஷியல், ஆக்டிவ் ரியர் லாக்கிங் டிஃபரன்ஷியல் ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

 லேண்ட்ரோவர் டிஃபென்டர் டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் துவங்கியது?

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி ரூ.73.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. சிறந்த சொகுசு ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாக தனி மதிப்புடன் இந்திய சந்தையில் கலக்க வந்துள்ளது லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி.

Most Read Articles

English summary
According social media report, Land Rover has started Defender SUV deliveries in India.
Story first published: Tuesday, October 20, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X