பாதுகாப்பை நினைச்சு கவலைப்படாதீங்க... இந்த கார் இரும்பு பெட்டகத்தைபோல் உங்களை பாதுகாக்கும்... முழு விபரம்!

லேண்ட்ர் ரோவர் டிஃபெண்டர் 110 காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

பாதுகாப்பை நினைச்சு கவலைப்படாதீங்க... இந்த கார் இரும்பு பெட்டகத்தைபோல் உங்களை பாதுகாக்கும்... முழு விபரம்!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் 110 காரை யூரோ என்சிஏபி, மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிசோதனையில் டிஃபெண்டர் 110 கார் அதிக பாதுகாப்பு திறன்மிக்க வாகனம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த காரை மிக சமீபத்திலேயே லேண்ட் ரோவர் நிறுவனம் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பை நினைச்சு கவலைப்படாதீங்க... இந்த கார் இரும்பு பெட்டகத்தைபோல் உங்களை பாதுகாக்கும்... முழு விபரம்!

இதில், இந்திய சந்தையும் அடங்கும். இந்த நிலையில், இக்காரை வாங்கியோரை பெறுமைப்படுத்தும் வகையில் அதன் பாதுகாப்பு திறன் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. முதன் முறையாக இக்காரை ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவிலேயே லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்தே மிக சமீபத்தில் உலக நாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பை நினைச்சு கவலைப்படாதீங்க... இந்த கார் இரும்பு பெட்டகத்தைபோல் உங்களை பாதுகாக்கும்... முழு விபரம்!

இதன் சிறப்பு சொகுசு வசதி காரணமாக செல்வந்தர்களின் விருப்பமான காராக இது மாறியிருக்கின்றது. இந்த நிலையில், இது வெறும் சொகுசான பயண அனுபவத்தை மட்டுமின்றி மிகுந்த பாதுகாப்பான பயணத்தையும் வழங்கக்கூடியது என்பதை நிரூபிக்கின்ற வகையில் யூரோ என்சிஏபி நிகழ்த்திய விபத்து பரிசோதனையில் செயல்பட்டிருக்கின்றது.

பாதுகாப்பை நினைச்சு கவலைப்படாதீங்க... இந்த கார் இரும்பு பெட்டகத்தைபோல் உங்களை பாதுகாக்கும்... முழு விபரம்!

இதன் உறுதியான உடல் கட்டமைப்பு மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இக்காருக்கு ஐந்திற்கு ஐந்து என்ற நட்சத்திர ரேட்டிங்க்ஸைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. பன் முக மோதலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இந்த ரேட்டிங்க்ஸை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காருக்கு யூரோ என்சிஏபி வழங்கியிருக்கின்றது.

பாதுகாப்பை நினைச்சு கவலைப்படாதீங்க... இந்த கார் இரும்பு பெட்டகத்தைபோல் உங்களை பாதுகாக்கும்... முழு விபரம்!

துரித நேரத்தில் செயல்பட்ட மல்டி கொல்லிசன் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இன்னும் பல அவசர கால அம்சங்களின் காரணத்தினால் இந்த சிறப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. மேலும், ஆறு ஏர் பேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்ட பன்முக பாதுகாப்பு வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்பு திறன்களைக் கொண்ட காரையே லேண்ட் ரோவர் நிறுவனம் அக்டோபர் 15ம் தேதி விற்பனைக்கு வழங்கியது. இக்கார் இந்தியாவில் ரூ. 73.98 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும ஆகும்.

Most Read Articles
English summary
Land Rover Defender 110 Gets 5 Star Safety Rating In Euro NCAP. Read In Tamil.
Story first published: Wednesday, December 9, 2020, 19:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X