Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாகனத்தின் விலையோ ரூ.44 லட்சம், மாடிஃபைக்கு ஆன செலவோ ரூ.77 லட்சம்!! 2020 டிஃபெண்டரின் ‘ரேசிங் க்ரீன் எடிசன்’
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடல் கஸ்டம் 'ரேசிங் க்ரீன் எடிசன்' என்ற பெயரில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் லேண்ட் ரோவர் காரை பற்றிய விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழமையான டிஃபெண்டரின் தோற்றத்தை அப்படியே பெற்று வந்திருந்தாலும் இந்த 2020 மாடலின் டிசைன்கள் முற்றிலும் மாடர்ன் தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நீளமான வீல்பேஸ் ‘110' மற்றும் குறைவான வீல்பேஸ் ‘90' என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய டிஃபெண்டர் சர்வதேச சந்தைகளில் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் உள்பட நிறைய எண்ணிக்கையில் என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் டிஃபெண்டர் மாடல்கள் அதிகளவில் கஸ்டமைஸ்ட் செய்யப்படுவது உண்டு. இந்த வகையில் போலாந்தை சேர்ந்த கார்லெஸ் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மூலமாக 2020 டிஃபெண்டர் அட்டகாசமான பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இறுதியாக மேனுவலாக ப்ரஷ் ஸ்ட்ரோக்ஸ் மூலமாக பெயிண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கஸ்டமைஸ்ட் நிறுவனம் ‘ரேசிங் க்ரீன் எடிசன்' என பெயர் வைத்துள்ளது. பெயிண்ட் மட்டுமின்றி வாகனத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சக்கர வளைவுகள், மேற்கூரை மற்றும் கூடுதல் சக்கரத்திற்கான கவரின் மேற்புறத்தில் ஃபைபர் நீட்டிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கஸ்டம் அலாய் சக்கரங்களையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. மேற்கூரை கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்பக்க பொனெட்டில் இருந்து மேற்கூரை வழியாக பின்பக்கம் வரையில் தடிமனான ரேசிங் ஸ்ட்ரிப் செல்கிறது. உட்புறம் ஃப்ரான்ஸில் பிரபலமான காக்னாக் பிராண்டி நிறம் மற்றும் அடர் பச்சை நிற லெதர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டு கார்பன் ஃபைபர் உள்ளீடுகளை ஏற்றுள்ளது.

லெதர் இருக்கைகள் ஸ்போர்டியான வடிவத்தில் உள்ளன. பின் இருக்கை வரிசையில் நடு பயணிக்காக சிறிய மேசை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருக்கைகள் ரேசிங் ஸ்டைலில் உள்ளன. மற்றப்படி எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளிலோ அல்லது என்ஜின் அமைப்பிலோ இந்த கஸ்டமைஸ்ட் எடிசனில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த கஸ்டமைசேஷன் மாற்றங்களுக்கு 85,000 யூரோக்கள் (கிட்டத்தட்ட ரூ.76.17 லட்சம்) வரையில் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய சந்தையில் புதிய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் விலையே 43,625 பவுண்ட்கள் (ரூ.43.28 லட்சம்) தான் என்பது குறிப்பிடத்தக்கது.