Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லேண்ட்ரோவர் டிஃபென்டர் 'ஹைப்ரிட் மாடலுக்கு புக்கிங் துவங்கியது.. துளி மாசு இல்லாமல் 43 கிமீ தூரம் பயணிக்கலாம்!
லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் மாடல்கள்
கடந்த அக்டோபர் மாதம் லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பிரிமீயம் ஆஃப்ரோடு பிரியர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ள இந்த எஸ்யூவி டிஃபென்டர் 90 (3 டோர்) மற்றும் டிஃபென்டர் 110 (5 டோர்) என்று இரண்டு வீல்பேஸ் நீளம் கொண்ட மாடல்களில் வந்தது.

ஹைப்ரிட் மாடல்
இந்த நிலையில், டிஃபென்டர் 110 எஸ்யூவியின் ப்ளக் இன் ஹைப்ரிட் எனப்படும் பெட்ரோல், மின்சார மோட்டார் என இரண்டும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் மாடலும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

குறைவான மாசு உமிழ்வு
சாதாரண மாடலைவிட குறைவான மாசு உமிழ்வு கொண்ட இந்த ப்ளக் இன் ஹைப்ரிட் டிஃபென்டர் 110 மாடலுக்கு இன்று முதல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது டிஃபென்டர் P400e என்ற வேரியண்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

முதல் ப்ளக் இன் ஹைப்ரிட்
ஜாகுவார் - லேண்ட்ரோவர் கூட்டணி நிறுவனத்தின் முதல் ப்ளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலாக புதிய டிஃபென்டர் பி400இ இந்தியாவில் களமிறங்க உள்ளது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 105kW மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் எஞ்சின் திறன்
பெட்ரோல் எஞ்சின் மட்டும் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் ஆற்றல் அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

ஹைப்ரிட் திறன்
இதன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 398 பிஎச்பி பவரையும், 640 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலானது மணிக்கு 209 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 100 கிமீ வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டிவிடும்.

பேட்டரி திறன்
இந்த காரில் 19.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சாதாரண வீட்டு சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் தேர்வுகளையும் லேண்ட்ரோவர் வழங்குகிறது.

ரேஞ்ச்
இந்த காரை பெட்ரோல் எஞ்சினை அணைத்துவிட்டு, மின் மோட்டாரில் மட்டும் வைத்து இயக்கும்போது 43 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு மாசு உமிழ்வு இல்லாத எரிபொருள் தேர்வாக இது அமையும்.

ஆஃப்ரோடு நுட்பங்கள்
புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் பி400இ ஹைப்ரிட் மாடலானது ஆஃப்ரோடு செயல்பாடுகளிலும் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டம், லோ ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் லேண்ட்ரோவர் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 20 அங்குல சக்கரங்களும், ஆல் டெர்ரெயின் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

வேரியண்ட் விபரம்
புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் பி400இ ஹைப்ரிட் மாடலானது 5 டோர் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும். எஸ்இ, எச்எஸ்இ, எக்ஸ்-டைனமிக் எச்எஸ்இ மற்றும் எக்ஸ் ஆகிய வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும். 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் மாடல்களிலும் தேர்வு வாய்ப்பு வழங்கப்படும்.

டெலிவிரிப் பணிகள்
கடந்த அக்டோபர் மாதம் வந்த சாதாரண லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி மாடல்களானது ரூ.73.98 லட்சம் முதல் ரூ.89.63 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. இந்த நிலையில், புதிய ஹைப்ரிட் வேரியண்ட்டின் விலை விபரம் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது வெளியிடப்படும். அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.