இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான லேண்ட்ரோவர், டிஃபென்டர் ஆஃப் ரோடு எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. புத்தம் புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியை பார்வையிடுவதற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். முதல் பார்வையிலேயே இந்த எஸ்யூவி எங்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் எந்தவொரு சவாலான நிலப்பரப்பையும் எதிர்கொள்ள தயார் என்பது போல் கம்பீரமாக நின்றது.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

டிஃபென்டர் 90 (Defender 90) மற்றும் டிஃபென்டர் 110 (Defender 110) என 2 மாடல்களில், இந்த எஸ்யூவி கிடைக்கும். இந்த 2 மாடல்களும், Base, S, SE, HSE மற்றும் First Edition என தலா 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். டிஃபென்டர் 90 மற்றும் டிஃபென்டர் 110 மாடல்களை, எப்படி வேறுபடுத்தி பார்ப்பது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இது மிகவும் எளிமையானது. டிஃபென்டர் 90 மாடல், 3-டோர் பாடி ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டிஃபென்டர் 110 மாடல், 5 டோர் பாடி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 5 டோர் 110 வெர்சன் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். இருந்தாலும் 3 டோர் 90 வெர்ஷனையும், லேண்ட்ரோவர் நிறுவனம் வரும் நாட்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. நாங்கள் ஷோரூமிற்கு சென்றபோது, டிஃபென்டர் 110 மாடலின் SE மற்றும் First Edition ஆகிய இரண்டு வேரியண்ட்களும் எங்களை கம்பீரமாக வரவேற்றன. இந்த ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சியில், லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி கார் குறித்து நாங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை இங்கே உங்களுக்கு விவரிக்கிறோம்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

டிசைன் & ஸ்டைல்

டிஃபென்டர் 110 மாடலை நீங்கள் நேரில் பார்க்கும்போது மட்டுமே, அது எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான எஸ்யூவி என்பதை நீங்கள் உணர்வீர்கள். நேர்மையாக செல்வதென்றால், புகைப்படங்களில் அதனுடைய பிரம்மாண்டத்தை உணர முடியாது. இந்த எஸ்யூவி காரின் முன்பகுதியில், டிஆர்எல்கள் உடன் எல்இடி ஹெட்லைட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது சிறப்பாக இருப்பதுடன், பிரகாசமாக ஒளிர்கிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

டிஃபென்டர் 110 எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில், எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் யூனிட் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பம்பரின் கீழ் பகுதியில் ஒருங்கிணைந்த எல்இடி பனி விளக்குகளையும் இது பெற்றுள்ளது. பெரிய பம்பரை, இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. அத்துடன் பானெட்டில் உள்ள மடிப்புகள், வசீகரமான தோற்றத்தை கொடுக்கின்றன. அத்துடன் பானெட்டின் மையப்பகுதியில், ‘DEFENDER' பேட்ஜ் கம்பீரமாக வீற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில், இந்த எஸ்யூவியின் முன் பகுதி அற்புதமாக உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் வெளிப்புறத்தில் மொத்தம் 6 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர காரை சுற்றிலும், சென்சார்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் அட்டகாசமான 360 டிகிரி பார்வை கிடைப்பதுடன், சவால் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது, இது உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் ஐஆர்விஎம்மிற்கு பின்னால் ஒரு கேமரா வழங்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவ் லேன் அஸிஸ்ட் ஆகியவற்றுக்காக இது வேலை செய்கிறது. இதுதவிர சுறா-துடுப்பு ஆன்டெனாவிலும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஐஆர்விஎம்மில் வீடியோவை காட்டுகிறது (ஸ்விட்ச் மூலமாக). பூட் பகுதியில் அதிகப்படியான லக்கேஜ் இருக்கும்போது, கண்ணாடி மூலமாக பின் பகுதியை பார்க்க முடியாத சூழல்களில், இந்த வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

இனி பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இந்த எஸ்யூவி காரில், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. வெவ்வேறு விதமான பேட்டர்ன்களில் தேர்வு செய்து கொள்ள முடியும். அதே சமயத்தில், இந்த எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்கள், 19 இன்ச் வீல்களை பெற்றுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

க்ரவுண்ட் க்ளியரன்ஸ் என்ற விஷயத்திலும், லேண்ட்ரோவர் டிஃபென்டர் அசத்துகிறது. சாதாரண நிலையில், இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 218 மிமீ. இதுவே போதுமானதுதான். ஆனால் லேண்ட்ரோவர் டிஃபென்டர் ஏர்-சஸ்பென்ஸன்களை கொண்டிருப்பதால், ஆஃப் ரோடு மோடில், உயரத்தை 291 மிமீ வரையில் உங்களால் உயர்த்தி கொள்ள முடியும்! ஒருமுறை முழுமையாக உயர்த்தப்பட்டு விட்டால், இந்த எஸ்யூவிக்கு உள்ளே ஏறுவதும், இறங்குவதும் கடினமாகி விடும்தான். ஆனால் இத்தகைய சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மூலமாக எப்பேர்பட்ட சவாலான நிலப்பரப்பையும், இந்த கார் எளிதாக கடக்கும்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

பின்பகுதியை பொறுத்தவரை, புத்தம் புதிய டிசைனில் டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் பூட்டிலேயே ஸ்பேர் வீல் இணைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து விட்டு பார்த்தால், பேட்ஜ்கள் மற்றும் வேரியண்ட்களின் பெயர்கள் பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியின் எந்த மாடலிலும், க்ரோம் பூச்சுகளுக்கு வேலையே இல்லாமல் லேண்ட் ரோவர் பார்த்து கொண்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

இன்டீரியர் & வசதிகள்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே விசாலமான இடவசதி கொண்ட கேபின் நம்மை வரவேற்கிறது. இந்த காரில் பெரிய பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆல்பைன் லைட் விண்டோக்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை கேபினுக்கு உள்ளே அதிக ஒளியை அனுமதிக்கின்றன. இதன் மூலம் இயல்பாகவே கேபின் பெரிதாக தோன்ற தொடங்கி விடுகிறது. அத்துடன் சஃபாரியின்போது, வெளிப்புறத்தை நன்றாக ரசிக்கவும் இவை உதவி செய்கின்றன. டிஃபென்டர் எஸ்யூவியில் மொத்தம் 3 இன்டீரியர் வண்ண தேர்வுகள் கிடைக்கின்றன.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

டிஃபென்டர் எஸ்யூவி காரில், ஒட்டுமொத்தமாக 14 யூஎஸ்பி மற்றும் சார்ஜிங் சாக்கெட்கள் உள்ளன. இதில், பூட் பகுதியில் உள்ள 230V சார்ஜரும் அடங்கும். லேப்டாப்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்றவற்றை இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டின் முன்பகுதியில், பாசஞ்சர் மற்றும் ஓட்டுனருக்கு வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த 2 இருக்கைகளுக்கும், சீட் மெமரி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

ஆனால் விலை குறைவான வேரியண்ட்களில், சிறிய துளைகளுடன் கூடிய இருக்கைகள்தான் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 'ஹீட்' மற்றும் 'கூல்' ஆப்ஷன்களும் இடம்பெறவில்லை. அத்துடன் இந்த வேரியண்ட்களில், ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே சீட் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டியரிங் வீலையும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அத்துடன் ஆட்டோ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வசதியானது, ஓட்டுனரின் இருக்கை உயரத்திற்கு ஏற்ப ஸ்டியரிங் வீலை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கு அனுமதிக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

அத்துடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும், இந்த கார் பெற்றுள்ளது. இந்த டச்ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது. இதுதவிர முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த கார் பெற்றுள்ளது. வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் இது வழங்குகிறது. இந்த காரின் ஸ்டியரிங் வீல் லெதரால் சுற்றப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீலிலேயே பல்வேறு கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளதால், ஓட்டுனர் சாலையில் கவனம் செலுத்த முடியும்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் 3டி மெரிடியன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும், லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நீர் நிலைகளின் ஆழத்தை கண்டறியும் வசதியும் இடம்பெற்றுள்ளது. நீரோடை போன்றவற்றை கடப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இதுதவிர ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய தலைமுறை டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2 வசதியும், டிஃபென்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளது. ஜென்ரல் டிரைவிங், க்ராஸ், க்ராவெல், ஸ்னோ, மட் & ரட்ஸ், சேண்ட், ராக் க்ராவல் & வேட் ஆகிய டிரைவிங் மோடுகள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் ஓட்டுதல் அனுபவத்தை மேம்படுத்தி கொள்ள இது உதவி செய்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

இன்ஜின்

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர், டர்போ-பெட்ரோல், பி300 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் சக்தி 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படும். டீசல் வேரியண்ட்டையும், லேண்ட்ரோவர் நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

விலை & முன்பதிவு தகவல்கள்

டிஃபென்டர் எஸ்யூவி காரின் விலைகளை லேண்ட்ரோவர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. அத்துடன் முன்பதிவுகளையும் ஏற்க தொடங்கியுள்ளது. லேண்ட்ரோவர் டிஃபென்டர் 90 மாடலின் விலை 69.99 லட்ச ரூபாய் முதல் 81.30 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டிஃபென்டர் 110 மாடலின் விலை 76.57 லட்ச ரூபாய் முதல் 86.27 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது லேண்ட்ரோவர் டிஃபென்டர்... கார் சும்மா நச்சுனு இருக்கு

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அத்துடன் எப்பேர்பட்ட சவாலான நிலப்பரப்பையும் எளிதாக கடக்க கூடிய திறனை பெற்றுள்ளது. பிரம்மாண்டமாகவும், கரடுமுரடான ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதாகவும், அதே நேரத்தில் சௌகரியமாகவும் இருக்க கூடிய ஒரு சொகுசு ஆஃப் ரோடு எஸ்யூவி காரை வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்றதாக லேண்ட்ரோவர் டிஃபென்டர் இருக்கும்!

Most Read Articles

English summary
Land Rover Defender SUV Review (First Look): Features, Engine, Price and All You Need to Know. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X